47 ஆண்டுகளுக்கு முன் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார்!
ஷிம்லா: பிரபல பாலிவுட் நடிகர், ஜிதேந்திரா, 47
ஆண்டுகளுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் உறவுப் பெண் அளித்த புகாரின்படி, போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.
பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், ஜிதேந்திரா. இவருக்கு இப்போது வயது 75 ஆகிறது. இவர் மீது, அவரது நெருங்கிய உறவுப் பெண் ஒருவர் (வயது 65) ஹிமாச்சல பிரதேச காவல்துறைக்கு இமெயில் மூலமாக அளித்த புகாரில், நடிகர் ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், தனக்கு 18 வயதாக இருக்கும் போது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, ஷிம்லா நகரில் நடக்கும் சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு வருமாறு, என்னை அழைத்ததாகவும், ஷிம்லா நகர ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, இரவில் தனது அறைக்கு வந்த ஜிதேந்திரா,தன்னை பலாத்காரம் செய்ததாகவும். அவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உடனே எப்.ஐ.ஆர்
இந்த புகாரின்படி, ஜிதேந்திராவுக்கு எதிராக, ஷிம்லா காவல்துறையினர், எப்.ஐ.ஆர்., பதிவு செய்து உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.03.2018
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.03.2018