disalbe Right click

Monday, March 12, 2018

பெரியம்மாவுக்கு ஜீவனாம்சம்

சின்னம்மா பிள்ளைகள் பெரியம்மாவுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா?
இந்த வழக்கில் ராதாபாய் என்பவர் ஒருவருக்கு முதல் மனைவி ஆவார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால், அவரது சம்மதத்துடன், அவர் கணவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அந்த இரண்டாம் தார மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். அந்தக் குழந்தைகளில் ஒருவர் டாக்டர் ஆகவும், மற்றொருவர் இன்ஜினியர் ஆகவும் ஆகிறார்கள். இந்நிலையில் இவர்களின் தந்தை இறந்து போய்விடுகிறார். இறக்கும் போது, அவரது பெயரில் சில சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த சொத்துக்களை இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகளே அனுபவித்து வந்தனர்
ஜீவனாம்சம் வழங்க வேண்டும்!
கணவர் இறந்து விட்டதால் வயதான முதல் மனைவியான ராதாபாய் அனாதை ஆகி விடுகிறார்.  தன் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாபாய்க்கு மாதம்தோறும் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகள் இந்த மேல்முறையீட்டு மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மாற்றாந்தாய் ஜீவனாம்சம் கேட்க முடியாது!
இரண்டாம் தார பிள்ளைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மாற்றாந்தாய் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி பாம்பே உயர்நீதிமன்றம் "ரமாபாய் Vs தினேஷ்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம், ஒரு மாற்றாந்தாய்க்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை குறித்து விவாதித்திருந்தது. மேலும் கு. வி. மு. பிரிவு 125 ல் கூறப்பட்டுள்ள தாய் என்கிற விளக்கத்திற்குள் மாற்றாந்தாய் வருவதில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
முதல் மனைவியும், மாற்றாந்தாயுமான ராதாபாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "D. வடோடரியா Vs குஜராத் மாநில அரசு (1996-4-SCC-497)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அதில் கு. வி. மு. பிரிவு 125 ன் கீழ் மாற்றாந்தாய்க்கு ஜீவனாம்சம் கோருவதில் உள்ள உரிமைகள் குறித்து விவரிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.
" குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 , அந்த பிரிவு இயற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எளிமையாக பயன்படுத்த வேண்டும். குழந்தை இல்லாத மாற்றாந்தாய் தன்னுடைய கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம், தான் ஒரு விதவை அல்லது கணவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஜீவனாம்சம் கோரலாம் என்று கூறியுள்ளது.
மேலே சொல்லப்பட்ட தீர்ப்பை பாம்பே உயர்நீதிமன்றம் "சரோஜ் கோவிந்த் முக்கவார் Vs சந்திரகலா பாய் (2009-ALLMR-CRL-1139)" என்ற வழக்கில் மேற்கோள் காட்டி தீர்ப்பு கூறியுள்ளதாகவும் கூறி வாதிட்டார்.
ஜீவனாம்சம் பெறத் தடையில்லை!
எனவே மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற எவ்வித தடையும் இல்லை என்று பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Criminal Appeal No - 1486/2001 Dr.Ravi Kumar and others Vs Radha Bai and Others
2013-1-DMC-509


நன்றி : முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான Dhanesh Balamurugan
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.03.2018 

Friday, March 9, 2018

ஆன்லைன்/இசேவை மையம் மூலமாக சான்றிதழ்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணைய சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு 15 வகையான சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் -சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு 
💬 சாதிச் சான்றிதழ்
💬 வருமானச் சான்றிதழ்
💬 இருப்பிடச் சான்றிதழ்
💬 முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் 
💬 கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் 
ஆகிய 5 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது. 
தற்போது  
💬 விவசாய வருமானச் சான்றிதழ்
💬 சிறு, குறு விவசாயி சான்றிதழ்
💬 கலப்புத் திருமணச் சான்றிதழ்
💬 விதவைச் சான்றிதழ்
💬 வேலையின்மைச் சான்றிதழ்
💬 குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ்
💬 கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ்
💬 ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ்
💬 திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ்
💬 வாரிசு சான்றிதழ்
💬 செல்வ நிலைச் சான்றிதழ்
💬 அடகு வணிகர் உரிமம்
💬 வட்டிக்குப் பணம் கொடுப்போர் உரிமம்
💬 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் 
ஆகிய சான்றிதழ்களையும் இந்த வசதி மூலம் பொதுமக்கள் பெறலாம்.
என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பொதுச்சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு ஒன்று வழங்கப்படும். இந்த விவரம் அவர்கள் பதிவு செய்துள்ள செல்போனுக்கு  குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். தங்களது விண்ணப்பங்களின் நிலவரத்தை அறிய '155250' என்ற எண்ணுக்கு விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தோ பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பித்தவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்த குறுஞ்செய்தி கிடைத்தவுடன் விண்ணப்பதாரர் இணையதளத்தில் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது அருகிலுள்ள அரசு பொதுச்சேவை மையம் மூலமாகவோ  சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018 

முன்பதிவு ரயில் டிக்கெட்

மற்றொருவருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ஒரு பயணத்திற்காக ரயில் டிக்கட் முன்பதிவு செய்திருப்போம். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதிருக்கும். அந்த நேரத்தில்  பெரும்பாலானோர்  அந்த  டிக்கெட்டை ரத்து செய்து விடுவோம்.  அல்லது  அதை அப்படியே விட்டுவிடுவோம்.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டை நாம் வேறொருவர் பெயருக்கு மாற்றிக் கொள்ள தற்போது முடியும்! 
அதற்கு என்ன வழிமுறை என்பதைப் பற்றி கீழே காண்போம். 
ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறை
எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல்  முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக  மாற்றிக்கொள்ளும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டி முறைகளை கீழே காணலாம்.
  ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும்பெயரை மாற்ற வேண்டும்இருக்கைபடுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டமுக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் அலுவலகங்களில் உள்ள தலைமை கண்காணிப்பாளரை நாம் முதலில் அணுகவேண்டும்.
❤ முன்பதிவு செய்த நீங்கள் அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவித்தால் போதுமானது.  பயணச்சீட்டு   மாற்றித் தரப்படும்.
 நீங்கள் உங்களது முன்பதிவு டிக்கெட்டை உங்களது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால் போதுமானது.  பயணச்சீட்டு   மாற்றித் தரப்படும்.
ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு செய்திருக்கும் போது, அதில் சில மாணவர்கள் திடீரென வரவில்லை என்ற சூழ்நிலையில்  அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்லலாம் என்று பள்ளி / கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தால். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோள் கடிதம் ஒன்றை பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து பயணிக்கலாம்
ஒரு திருமணத்துக்காகவோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்காகவோ மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் N.C.C or N.S.S பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக முன்பதிவு   நிலைய    தலைமை  கண்காணிப்பாளரிடம் கொடுத்து கடிதம் எழுதிக் கொடுத்து   மாற்றிக்கொள்ள முடியும்.
************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018