வழக்கின் முன்னோட்டம்
வாதி தங்கவேல் தொடுத்த வழக்கு
R. தங்கவேல் என்பவருக்கும்,
S.கந்தசாமி மற்றும் பிரதிவாதிகளுக்குமிடையே 15.8.2008ம் தேதி ஒரு விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படையில்
மொத்த கிரைய தொகையான ரூ.10,00,000/-ல் வாதியான R. தங்கவேல் ரூ.2,5௦,௦௦௦/- பிரதிவாதிகளுக்கு
முன்பணமாக கொடுத்துள்ளார்.
பிரதிவாதிகள் அந்த விற்பனை ஒப்பந்தத்தின் படி அவர்களுடைய பங்கினை நிறைவேற்ற தவறியதால், ஏற்றதை ஆற்ற கோரிய பரிகாரத்தை பெறுவதற்காக, அ.வ.எண்.134/2011 என்கிற எண்ணில் ஒரு வழக்கை திருச்செங்கோடு சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
பிரதிவாதி தொடுத்த தொடர் வழக்கு
அந்த வழக்கில் வாதியால் தாக்கல் செய்யபட்டிருந்த
விற்பனை ஒப்பந்தத்தில்,
நான்காம் பிரதிவாதியின்
கையொப்பத்தை மோசடியாக போட்டு வாதி தயாரித்துள்ளதாகவும், அவர் ஆங்கிலத்தில் மட்டுமே எப்போதும் கையொப்பம் போடுவார் எனவும், எந்த ஒரு ஆவணத்திலும், அவர் எப்போதும் தமிழில் கையொப்பம் போட்டதில்லை எனவும், எனவே விற்பனை ஒப்பந்தத்தில்
உள்ள நான்காம் பிரதிவாதியின் கையொப்பத்தை ஒப்பிட்டு பார்த்து, அது குறித்து ஒரு கருத்துரையை கையெழுத்து நிபுணரிடமிருந்து பெறுவதற்கு அந்த ஆவணத்தையும் அவரால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள கையொப்பங்களையும்
தடய அறிவியல் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று, கையெழுத்து நிபுணரின் அறிக்கையை பெற்று அதனை நீதிமன்றத்தில்
சமர்ப்பிப்பதற்காக ஒரு வழக்கறிஞர் ஆணையாளரை நியமிக்குமாறு
I.A.No, 908/2011 என்கிற எண்ணில். நான்காம் பிரதிவாதி ஓர் இடைக்கால விண்ணப்பத்தை இந்திய சாட்சிய சட்ட பிரிவு 45 ன் கீழ் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்கிறார்
பிரதிவாதி தொடுத்த தொடர் வழக்கில் வாதியின் பதிலுரை
அது பொய்யானது எனவும், அதே நீதிமன்றத்தில்
நான்காம் பிரதிவதியால்
பழனி கௌண்டர் என்பவர் மீது அ.வ. எண். 91 / 2௦௦9 என்ற வழக்கில், வழக்குரை மற்றும் வக்கலாத்து ஆகியவற்றில் இந்த எதிர்மனுதாரர்
/ நான்காம் பிரதிவாதி தமிழில் கையொப்பம் இட்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை கால தாமதப்படுத்த
வேண்டும் என்கிற நோக்கிலும், இந்த மனுதாரர் / வாதியை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கிலும், அந்த இடைக்கால விண்ணப்பத்தை நான்காம் பிரதிவாதி தாக்கல் செய்துள்ளதாகவும்,
அந்த சத்திய பிரமாண பதில் உரையில் வாதி குறிப்பிடுகிறார்.
நீதிமன்றம் போட்ட உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த விசாரணை நீதிமன்றம், இந்த எதிர் மனுதாரர் /நான்காம் பிரதிவாதியால்
இந்திய சாட்சிய சட்ட பிரிவு 45 ன் கீழ் தாக்கல் செய்யபட்டிருந்த அந்த விண்ணப்பத்தை
அனுமதித்து 01.01.2௦13 ம் தேதி உத்தரவிடுகிறது.
வாதி தாக்கல் செய்த சீராய்வு மனு
விசாரணை நீதிமன்றம் அனுமதித்த விண்ணப்பத்தை சீராய்வு செய்ய வேண்டும் என்று வாதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறார். அந்த வழக்கின் விபரம்தான் கீழே உள்ளது.
**************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.03.2018
சென்னை உயர்நீதிமன்றம்
நீதியரசர் திரு. M.V.முரளிதரன்
C.R.P.(PD) No. 892/2013
10.3.2017
R. தங்கவேல் –மனுதாரர்
எதிர்
S.கந்தசாமி மற்றும் பலர் – எதிர் மனுதார்கள்
திருச்செங்கோடு
சார்பு நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ள அ.வ. எண்: 134/2011 என்கிற வழக்கின் வாதி, இந்த சீராய்வு மனுவினை தாக்கல் செய்துள்ளார். ஏற்றதை ஆற்ற கோரிய பரிகாரத்தை பெறுவதற்காக அந்த வழக்கினை, இந்த மனுதாரர் / வாதி தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில் தாக்கல் செய்யபட்டிருந்த
விற்பனை ஒப்பந்தத்தில்
உள்ள நான்காம் பிரதிவாதியின் கையொப்பத்தை ஒப்பிட்டு பார்த்து, அது குறித்து ஒரு கருத்துரையை கையெழுத்து நிபுனரிடமிருந்து பெறுவதற்கு அந்த ஆவணத்தை அனுப்பி வைக்குமாறு கோரி I.A.No, 908/2011 என்கிற எண்ணில் நான்காம் பிரதிவாதி ஓர் இடைக்கால விண்ணப்பத்தை
தாக்கல் செய்திருந்தார்.
அந்த விற்பனை ஒப்பந்தத்தில் நான்காம் பிரதிவாதியின்
கையொப்பத்தை மோசடியாக போட்டு தயாரித்துள்ளதாகவும், அவர் ஆங்கிலத்தில் மட்டுமே எப்போதும் கையொப்பம் போடுவார் எனவும், எந்த ஒரு ஆவணத்திலும்,
அவர் எப்போதும் தமிழில் கையொப்பம் போட்டதில்லை
எனவும், அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். 15.8.2008 ம் தேதியிட்ட விற்பனை ஆவணத்தில் உள்ள கையொப்பங்கள் அவருடையதல்ல
எனவும் அந்த ஆவணத்தையும் அவரால் ஒப்பு கொள்ளப்பட்டுள்ள கையொப்பங்களையும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று, கையெழுத்து நிபுணரின் அறிக்கையை பெற்று அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒரு வழக்கறிஞர் ஆணையாளரை நியமிக்குமாறு
அந்த இடைக்கால விண்ணப்பத்தில் நான்காம் பிரதிவாதி கோரி இருந்தார்.
அந்த இடைக்கால விண்ணப்பத்திற்கு, வாதி ஒரு சத்திய பிரமான பதிலுரையை தாக்கல் செய்திருந்தார்.
இந்த எதிர்மனுதாரர்
/ நான்காம் பிரதிவாதி அவருடைய கையொப்பத்தை எப்போதும் ஆங்கிலத்தில்தான் போடுவார் என்பது, பொய்யானது எனவும், அதே நீதிமன்றத்தில் நான்காம் பிரதிவதியால்
பழனி கௌண்டர் என்பவர் மீது அ.வ. எண். 91 / 2௦௦9 என்ற வழக்கில், வழக்குரை மற்றும் வக்கலாத்து ஆகியவற்றில் இந்த எதிர்மனுதாரர்
/ நான்காம் பிரதிவாதி தமிழில் கையொப்பம் இட்டுள்ளார்
எனவும் குறிப்பிட்டு,
வழக்கு விசாரணையை கால தாமதப்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலும், இந்த மனுதாரர் / வாதியை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கிலும், அந்த இடைக்கால விண்ணப்பத்தை
நான்காம் பிரதிவாதி தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த சத்திய பிரமான பதில் உரையில் வாதி குறிப்பிட்டிருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த விசாரணை நீதிமன்றம், இந்த எதிர் மனுதாரர் / நான்காம் பிரதிவாதியால் இந்திய சாட்சிய சட்ட பிரிவு 45 ன் கீழ் தாக்கல் செய்யபட்டிருந்த
அந்த விண்ணப்பத்தை
அனுமதித்து 01.01.2௦13 ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் மீது இந்த சீராய்வு மனுவை வாதி தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுதாரர் / வாதிக்கும், பிரதிவாதிகளுக்குமிடையே 15.8.2008 ம் தேதி ஒரு விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மொத்த கிரைய தொகையான ரூ.10,00,000/- ல் வாதி ரூ.2,5௦,௦௦௦/- பிரதிவாதிகளுக்கு
முன்பணமாக கொடுத்துள்ளார்.
பிரதிவாதிகள் அந்த விற்பனை ஒப்பந்தத்தின் படி அவர்களுடைய பங்கினை நிறைவேற்ற தவறியதை, ஏற்றதை ஆற்ற கோரிய பரிகாரத்தை பெறுவதற்காக
அ.வ.என்.134/2014என்கிற எண்ணில் அந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது,
அந்த விற்பனை ஒப்பந்தத்தில் உள்ள நான்காம் பிரதிவாதியின் கை ஒப்பத்தையும், அவரால் ஒப்புகொள்ளப்பட்ட
கையொப்பத்தையும் ஒப்பிட்டு பார்த்து ஒரு கருத்துரையை
பெற வேண்டும் என்று கோரி நான்காம் பிரதிவாதி I.A.NO.908/2011என்கிற எண்ணில் ஓர் இடைகால விண்ணப்பத்தை
தாக்கல் செய்துள்ளார்.
இந்த எதிர்மனுதரர்/
நான்காம் பிரதிவாதி எப்போதும் ஆங்கிலத்தில் தான் கையொப்பமிடுவார் எனவும், தமிழில் கையொப்பமிடுகிற வழக்கம் இல்லை எனவும், அந்த இடைக்கால விண்ணப்பத்தில் குறிப்பிட்டு,
அந்த விற்பனை ஒப்பந்தத்திலுள்ள கையொப்பம் அவருடையதுதானா
என்பதை கண்டறிவதற்கு
கையெழுத்து நிபுணரின் கருத்துரையை பெறுவது அவசியம் என்று அந்த இடைக்கால விண்ணப்பத்தில் நான்காம் பிரதிவாதி மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த எதிர்மனுதாரர் / நான்காம் பிரதிவாதி பழனி கவுண்டர் என்பவர் மீது அ.வ.என்.91/2009 என்கிற வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த
வழக்கில் தமிழில்தான்
வழக்குரை மற்றும் வக்காலத்து ஆகியவற்றில் கையொப்பம் செய்துள்ளார். ஆகையால் இந்த எதிர்மனுதாரர் / நான்காம் பிரதிவாதி வழக்கமாக அவருடைய கையொப்பத்தை
ஆங்கிலத்தில்தான் போடுவார் என்று கூறுவது ஏற்று கொள்ள இயலாது எனவும், இந்த மனுதாரர் / வாதியை ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்திலும், வழக்கு நடவடிக்கையை
காலதாமதப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலும், அந்த இடைக்கால விண்ணப்பத்தை இந்த எதிர்மனுதாரர்
/ நான்காம் பிரதிவாதி தாக்கல் செய்துள்ளதாக அந்த பதிலுரையில் வாதி குறிப்பிட்டிருந்தார்.
ஏற்றதை ஆற்ற கோரிய நிவாரணத்தை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்கில் அல்லது கடனுருதி சீட்டின் அடிப்படையில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்கில் அல்லது கடனுருதி சீட்டின் அடிப்படையில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்கில், வழக்கு தரப்பினர்களின் கையொப்பம் குறித்து ஒரு பிரச்சினை எழுமேயானால்,
வழக்கு தரப்பினர்களின்
கையொப்பங்களின் உண்மை தன்மையை கண்டறியும் பொருட்டு, பிரச்சினைக்குரிய கையொப்பங்களை வழக்கு தரப்பினர்களால் ஒப்பு கொல்லப்பட்ட கையொப்பங்களோடு ஒப்பிட்டு பார்த்து இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 45 ல் கூறப்பட்டவாறு கருத்துரையை கையெழுத்து நிபுணரிடமிருந்து பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 45 : நிபுணர்களின் கருத்துக்கள்
அயல்நாட்டு சட்டம், அறிவியல் அல்லது கலை பற்றிய பிரச்சினை ஒன்றை குறித்தோ அல்லது கையெழுத்தின் அல்லது விரல் பதிவுகளின் தனி தன்மை குறித்தோ நீதிமன்றம் ஒரு கருத்துக்கு வர வேண்டியிருக்கும்போது, அந்த பிரச்சினையை
பற்றி அத்தகைய அயல்நாட்டு சட்டத்திலோ, அறிவியலிலோ அல்லது கைஎழுத்தின் அல்லது விரல் பதிவுகளின் தனி தன்மை குறித்த பிரச்சினைகளிலோ
சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் கருத்துக்கள்
தொடர்புற்ற பொருன்மைகளாகும். அத்தகைய நபர்கள் நிபுணர்கள் எனப்படுவார்கள்.
இந்த வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையை
தீர்மானிப்பதற்கு இந்த எதிர்மனுதாரர் / நான்காம் பிரதிவாதியால்
ஒப்பு கொள்ளப்பட்ட
அவருடைய கையொப்பத்தை
விற்பனை ஒப்பந்தத்திலுள்ள
கையொப்பத்தோடு ஒப்பிட்டு பார்த்து கருத்துரை பெறுவதற்காக
அந்த விற்பனை ஒப்பந்தத்தையும், ஒப்பு கொல்லப்பட்ட
கையொப்பங்களையும் தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இந்த எதிர்மநுதாரர்
/ நான்காம் பிரதிவாதி வழக்கமாக தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கையொப்பம் போடுவது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அதனை உரிய ஆவன சாட்சியங்களின்
மூலம் மெய்ப்பிக்க
வேண்டிய பொறுப்பு இந்த மனுதாரர் / வாதிக்குதான்
உள்ளது. ஆகவே, விசாரணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட
உத்தரவில் எந்த தவறும் இல்லை.
முடிவாக,
a) திருச்செங்கோடு
சார்பு நீதிமன்றத்தால்
908/2011 என்கிற இடைக்கால விண்ணப்பத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு உறுதி செய்யப்பட்டு, இந்த உரிமையியல் சீராய்வு மனு தள்ளுபடி செய்யபடுகிறது.
b) அந்த வழக்கில் பிரச்சினைக்குரிய விற்பனை ஒப்பந்தத்தையும், ஒப்பு கொள்ளப்பட்ட
கைஒப்பங்களையும், சென்னை, தமிழ்நாடு தடய அறிவியல் துறைக்கு எடுத்து சென்று அவற்றை ஒப்பிட்டு பார்ப்பதற்கு
உரிய கட்டளைகளை வழக்கறிஞர் ஆணையாளருக்கு, திருச்செங்கோடு,
கற்றறிந்த சார்பு நீதிபதி பிறப்பிப்பதோடு அந்த கையொப்பங்களை ஒப்பிட்டு பார்த்து அது குறித்த அறிக்கையை பெற்று அதனை 15 நாட்களுக்குள்
தாக்கல் செய்யுமாறும்
உத்தரவிட வேண்டும் என்று கட்டளையிடப்படுகிறது.
c) அவ்வாறு ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்னர் மூன்று மாதங்களுக்குள் அந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு
கட்டளைகளை பிறப்பித்து,
இந்த சீராய்வு மனுவினை தள்ளுபடி செய்து மாண்புமிகு நீதியரசர் திரு. M.V. முரளீதரன் தீர்ப்பளித்தார்.
ம.வ. : திரு. N. மனோகரன்
எ.ம.வ. : Ms. சித்திரை ஆனந்தன்
2017-2-TNCJ – 303
CDJ – 2017 – MHC – 1355
நன்றி : எனது நண்பரும், வழக்கறிஞருமான திரு Counsel Sree