அரசு பணியாளர் பரிசில்கள், வரதட்சணை, பொதுமக்கள் சிறப்பு செய்தல், கடன் கொடுக்கல், வாங்கல் பற்றிய விதிகள்!
அரசு பணியாளர் பரிசில்கள், வரதட்சணை, பொதுமக்கள் சிறப்பு செய்தல், கடன் கொடுக்கல், வாங்கல் பற்றி விதிகள் சொல்வதென்ன..
(GOVERNMENT SERVANTS' on Gifts, Dowry, Subscriptions,
Investments, lending and borrowing)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 சொல்வதைப் பார்போம்
THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES,1973
விதி 3. பரிசில்கள் (Gifts)
(1) இவ்விதிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டாலன்றி, அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல் அரசுப்பணியாளர் எவரும் ரூ.5000/-க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள
எந்தப்பரிசையும் எவரிடமிருந்தேனும் பெற்றுக்கொள்வதோ அல்லது தன்னுடைய வாழ்க்கை துணைவர் அல்லது தன்னுடைய குடும்பத்தைச்
சார்ந்த பிற உறுப்பினர் எவரும் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதோ கூடாது.
(G.O.Ms.No.6, P&AR (A) Department, dated.21.01.2008)
இருப்பினும் திருமணம், ஆண்டு நிறைவு விழா, ஈமச்சடங்கு மற்றும் சமய விழாக்கள் போன்ற சிறப்பு நேர்வுகளில் பரிசுகளைக் கொடுப்பதோ அல்லது பெறுவதோ நடப்பிலுள்ள
மதம் மற்றம் சமூக வழக்கங்களை ஒட்டியதாக இருப்பின் ரூ.5000/-க்கு மேற்படாத விலை மதிப்புள்ள பரிசுகளைத் தன்னுடைய உற்ற நண்பரிடமிருந்து அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து அரசு அலுவலர் பெறலாம் மற்றும் அப்பரிசினைப்
பெற்றுக் கொண்ட நாளிலிருந்து ஒரு திங்களுக்குள்
அரசுப்பணியாளர் அது குறித்த விவரத்தினை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
(அரசாணை (நிலை) எண்.225 ப(ம)நி.சீ(எ) துறை, நாள். 11.9.1998)
மேலும் வரம்புரையாக
தொகுதி B,C, & D அரசு அலுவலர்களைப் பொறுத்து, துணைத்தலைவர்களின் முன் அனுமதியுடன்
வெளிநாடு செல்லும் போதெல்லாம், தங்களின் தனிப்பட்ட நண்பர்கள் அல்லது அவர்தம் நெருங்கிய உறவினர்களிடமிருந்து பயணம், தங்கல் மற்றும் பிற தொடர்பான செலவுகளைப் பரிசில்களாகப்
பெறுவதற்கு இவ்விதியில்
உள்ளது எதுவும் பொருந்தாது.
(G.O.Ms.No.76, P&AR (A) Department, dated: 20.3.07.)
விளக்கம்:1
இந்த துணை விதியின் பயன் நோக்கில் அடிக்கல் நாட்டுதல் அல்லது ஒரு பொதுக்கட்டட
திறப்புவிழா அல்லது ஏதேனும் விழா நிகழ்ச்சிகளில்
அரசுப் பணியாளர் ஒருவருக்கு அளிக்கப்படும் ஏதேனும் கொத்துக் கரண்டி, சாவி அல்லது அது போன்ற பொருட்கள் பரிசிலாகக் கருதப்படும்.
விளக்கம் : 2
அரசு பணியாளரிடத்தில்
எத்தகைய அலுவல் முறைத் தொடர்பும் அற்ற நெருங்கிய உறவினர் அல்லது உற்ற நண்பர் அல்லாத வேறு யாரேனும் ஒருவரால் இலவசப் போக்குவரத்து, இலவச உணவு, இலவச உறையுள் அல்லது பிற வசதிகள் அல்லது வேறு ஏதேனும் பணத்தொடர்பான பலன்கள் அளிக்கப்படும்போது அவை பரிசில் என்பதில் அடங்குவனவாகும்.
குறிப்பு: 1- தற்செயலாக அளிக்கப்படும் உணவு, போக்குவரத்து
வசதி மற்றும் பிற சமூக விருந்தோம்பல்
பரிசிலாகக் கருதப்படமாட்டாது.
குறிப்பு: 2 - அரசு பணியாளர் ஒருவர் தன்னோடு அலுவல் முறையில் தொடர்பு கொண்டுள்ள எவரேனும் ஒரு தனிப்பட்டவரிடமிருந்து அல்லது தொழில் அல்லது வணிக நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றிலிருந்து மட்டுமீறிய விருந்தோம்பல்
அல்லது அடிக்கடி நிகழ்வுறும் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும்.
(2) எந்த ஒரு பரிசில் குறித்தும் அரசு அனுமதியின்றி ஏற்றுக் கொள்ளபடக்கூடியதா
எனக் கேள்வியொன்று
எழுமானால் அல்லது தனக்கு அளிக்கப்படவிருக்கும் பரிசிலானது அரசு அனுமதி இல்லாமல் ஏற்று கொள்ளப்படகூடியதா என அரசு பணியாளர் ஐயம் கொண்டால் அது குறித்து அத்தகைய அரசுப் பணியாளரால் அரசுக்கு எழுதப்பட வேண்டும். மேலும் அதன் மீது எடுக்கப்படும் அரசின் முடிவே இறுதியானதாகும்.
(3) தனக்குப் பரிசிலாக அளிக்கக் கருதப்படாத ஒர் உருவப்படம் மார்பளவு உருவச்சிலை, அல்லது சிலைக்காகவேண்டி ஏதேனும் ஒரு பொது அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அரசு பணியாளர் எவரேனும் ஒரு மாதிரியாக அமர்வதை இவ்விதியில்
உள்ள எதுவும் தடுப்பதாகக் கருதப்படக்கூடாது.
(4) அரசு பணியாளரிடம்
ஆதரவு மனப்பான்மையையும்,
ஆதாய நிலைப்பாட்டையும்
ஏற்படுத்துவதாகக் கருதக்கூடிய
அல்லது தனிநபருக்கு
அல்லது நிறுவனம் அல்லது நிறுமத்திற்கு கடப்பாடு காரணமாக சலுகை காட்ட வேண்டிய நிலையை ஏற்படுத்தக்கூடிய
அல்லது வெளிப்படையாக
தெரியாத ஆனாலும் ஊழல் என கருதக்கூடிய
நிலையினைத் தோற்றுவிக்கும்
வகையில் விலை உயர்ந்த பழைய ஊர்தி, அறைகலன் (furniture) மற்றும் வீட்டுக்கு தேவைப்படும் மின்கருவிகைளச் சலுகை விலையில் வாங்கவதற்காக அரசுப் பணியாளர் எவரும் வணிகம் அல்லது தொழிலில் ஈடுப்பட்டுள்ள
எந்த ஒரு தனி நபருடன் அல்லது நிறுவனத்துடன் அல்லது நிறுமத்துடன்
வணிக நடவடிக்கை எதையும் வைத்தக் கொள்ளக்கூடாது.
(5) துணை விதிகள் (2), (3) மற்றும் (4)-ல் உள்ளவை எப்படியிருந்தபோதிலும் இந்திய பேராளர் குழுவில்(Indian delegation) உறுப்பினராகவோ வேறு வகையிலோ உள்ள அரசுப்பணியாளர் ஒருவர், ஒரு சிறப்பு நிகழ்ச்சியின்போது ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத விலைமதிப்புள்ள பரிசிலை அயல்நாட்டிலுள்ள உயர் பதவியாளரிடமிருந்து பெற்றுத் தம்மிடம் வைத்துக் கொள்ளலாம். மற்ற அனைத்து நேர்வுகளிலும் இப்பரிசல்களைப்
பெற்றுக் கொள்ளலாம். வைத்து கொள்ளுதலும் குறித்து இது தொடர்பில் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தங்களால் முறைப்படுத்தப்படும்.
(6) அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அல்லது அரசுப்பணியாளர் ஒருவருடன் அலுவலர்முறை
நடவடிக்கைகளைக் கொண்டிருந்த
அல்லது கொண்டுள்ள அல்லது கொள்ளவாய்ப்புள்ள எந்தவொரு அயல்நாட்டு நிறுவனத்திடமிருந்தும் பரிசில் எதனையும் அரசுப்பணியாளர் பெற்றுக் கொள்ளக்கூடாது. மற்ற எந்த நிறுவனத்திலிருந்தேனும் அரசுப்பணியாளர்
ஒருவர் பரிசில்களைப்
பெற்றக் கொள்வது துணை விதி (4) -இல் உள்ள காப்புரைகளுக்குட்டதாய் இருத்தல் வேண்டும்.
விளக்கம்: பழைய பொருள்களுக்குரிய இயல்பான அல்லது நடப்பிலுள்ள அங்காடி விலையில் அப்பழைய பொருள்களை எவரிடமிருந்து
அல்லது எந்த்வொரு நிறுவனம் அல்லது நிறுமத்திடமிருந்தும் விலைக்கு வாங்கிக் கொள்ளும் வணிக நடவடிக்கைகளில்
அரசுப் பணியாளர் ஈடுபடுவதை இத்துணை விதியிலுள்ள
எதுவும் தடை செய்யாது.
(G.O.Ms.No.427, P&AR dated 13.12.93.)
விதி 3 (அ) வரதட்சணை (Dowry)
(1) அரசுப்பணியாளர் எவரும்:-
(i) வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ, வரதட்சணை வாங்க அல்லது கொடுக்க உடந்தையாகவோ
இருத்தல் கூடாது: அல்லது
(ii) நேர்வுக்கேற்ப மணமகள் அல்லது மணமகன் ஒருவரது பெற்றோர் அல்லது காப்பாளரிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ
பரிசம்/ வரதட்சணை கோரக்கூடாது.
விளக்கம்:- இவ்விதியின்
பயன் நோக்கில் வரதட்சணை என்பது 1961-ஆம் ஆண்டைய வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் (1961-ன் மையச் சட்டம் 28/1961) எவ்வாறு பொருள் கொள்ளப்பட்டுள்ளதோ அவ்வாறே பொருள் உடையது.
(2) அரசு ஊழியர் ஒவ்வொருவரும் அவரது திருமணத்திற்குப்
பின்னர் (அ) அவரது குழந்தைகளின் திருமணத்தின்
போது இவ்விதிகளில்
இணைப்பாகமைந்துள்ள அட்டவணை IV-ல் விளம்புகை ஒன்றினை துறைத் தலைவருக்கு அளித்திடல் வேண்டும். அரசு அலுவலர் திருமணம் செய்து கொள்கிறவிடத்து,
அரசு அலுவலரின் கணவன் (அ) மனiவி நேர்வுக்கேற்ப
மற்றும் பெற்றோர் (அ) காப்பாளர் கையொப்பமிடுதல்
வேண்டும். அரசு அலுவலரின் மகன் (அ) மகள் திருமணம் செய்த கொள்கிறவிடத்து, திருமணத்திற்காக தரப்பினர் இருவரும் மற்றும் அவர்களின் பெற்றோர் (அ) காப்பாளர் அதில் அரசு அலுவலரும் உட்பட விளம்புகையில் கையொப்பமிடுதல்
வேண்டும்.
விதி 4. அரசு பணியாளருக்குப் பொதுமக்கள் சிறப்பு செய்தல்:-
(Public demonstrations in honour of Government servants)
அரசு பணியாளர் எவரும் அரசின் முன் அனுமதியின்றி பாராட்டுரை, பணி நிறைவு வாழ்த்துரை அல்லது பாராட்டு பட்டயச் சான்றிதழ் எதனையும் ஏற்றுக் கொள்வதோ அல்லது தன்னையோ மற்ற அரசு பணியாளரையோ சிறப்பிக்கும்
முறையில் நடைபெறும் கூட்டத்தில் அல்லது கேளிக்கையில்
கலந்து கொள்வதோ கூடாது.
இருப்பினும், இந்த விதியில் உள்ள எதுவும் கீழ்க் காண்பவற்றுக்குப் பொருந்தாது:-
(i) அரசுப்பணியாளர் ஒருவர் பணி ஓய்வு அல்லது பணியிட மாறுதல் பெறுகிற நேர்வில் அல்லது அண்மையில் அரசுப்பணியிலிருந்து விலகியிருக்கிற
நேர்வில் அவரைச் சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படுகிற
தனிப்பட்டதும் இயல்பானதும்
ஆடம்பரமற்றதுமான விடை தருவிழா: அல்லது
(ii) பொது, அமைப்புகளால்
அல்லது நிறுவனங்களால்
ஏற்பாது செய்யப்படுகின்ற
எளிய, செலவற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க இசைதல், அல்லது
(iii) தான், பணியிடமாறுதல்
அல்லது ஓய்வு பெற்றுச் செல்லுகின்ற காலத்தில் தன் அலுவலக அல்லது துறை அலுவலர்களடங்கிய குழு நிழற்படத்தில் இடம் பெறுதல் அல்லது அப்படத்தினை ஏற்றுக் கொள்ளுதல்.
விதி 5. நிதி திரட்டல்(Subscriptions)
(1) (அ) துணை விதிகள் (3) மற்றும் (4)-ல் வகை செய்யப்பட்டுள்ளவாறன்றி அரசுப் பணியாளர் எவரும், அரசு அல்லது இதன் பொருட்டு அரசால் அதிகாரம் அளிக்கப்பெற்ற
அத்தகைய அதிகாரியின்
முன் ஒப்பளிப்பு இல்லாமல் நன்கொடைகள் கேட்பதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ அல்லது நோக்கம் எத்தகையதாயிருப்பினும் அதன் பொருட்டுப் பணமாக அல்லது பொருளாகத் திரட்டவோ அல்லது பிறவகையில் அது தொடர்பாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ கூடாது.
(ஆ) இருந்தபோதிலும்
ஒரு பணியாளர் சங்கம் அரசின் முன் ஒப்பளிப்புக்காக விண்ணப்பம் செய்யும்போதே
அச்சங்கத்திற்கு அத்தகைய ஒப்பளிப்பு அளிக்கப்பட்டால் நிதி திரட்டும் நபர் அல்லது நபர்களை குறிப்பிட்டு தெரிவித்தல்
வேண்டும்.
(2) உரிய நிறுவனத்திற்கு
மானியங்களை மூலமாகவோ அல்லது பிற வகையிலோ அரசு உதவியளிக்கும் அனைத்து நேர்வுகளிலும் தக்க ஆய்விற்குப்
பிறகு அரசால் அனுமதி வழங்கப்படலாம்.
(3) கொடிநாள் நிதி திரட்டலில் அரசுப் பணியாளர்கள்
தாமாகவே மனமுவந்து பங்கு கொள்ளலாம்.
(4) அரசின் அத்தகைய முன் ஒப்பளிப்பு இன்றி இந்துசமய அறக்கட்டளை ஆட்சித்துறையின்
செயல் அலுவலர் ஒருவர் கோயிலை புதுப்பிக்கும்
குழு ஒன்றின் சார்பில் அக்கோயிலின் செயல் அலுவலர் என்ற முறையில் நிதி திரட்டலாம். மேலும் அதனைத் தன் பொறுப்பிலே வைத்துக் கொள்ளலாம். இதன் பொருட்டு தனக்கு மதிப்பூதியம்
ஏதேனும் தர முன் வந்தால் அதனையும் அவர் ஏற்றுக் கொள்ளலாம்.
விதி 6. முதலீடுகள் மற்றும் கடன் கொடுக்கல், வாங்கல்
(Investments, lending and borrowing)
(1) எந்த அரசுப் பணியாளரும் ஏதேனும் கடன் மூலப்பத்திரம், பங்கு முதல் அல்லது பிற முதலீட்டில்
ஊக வணிக நோக்குடன் ஈடுபடுதல் கூடாது.
விளக்கம்:- பங்கு முதல்கள், பிணையங்கள் அல்லது பிற முதலீடுகளை வழக்கமாக வாங்குதல் அல்லது விற்றல் அல்லது இரண்டையும் மேற்கொள்ளுதலானத
இந்த விதியின் பொருளுக்கிணங்க ஊக வணிகத்தில் ஈடுபடுவதாகவே கருதப்படும்.
() எந்த அரசுப் பணியாளரும் தனது அலுவல்முறைக்
கடமைகளை நிறைவேற்றுவதில்
தனக்கு இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அல்லது செல்வாக்குக் கொள்ளத்தக்க
வகையில் அமைகின்ற எத்தகைய முதலீட்டையும் செய்யவோ அல்லது தம் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவரால் அல்லது தம் சார்பில் செயல்படும் யாரேனும் ஒருவரால் முதலீடு செய்யப்படுவதற்கோ அனுமதிக்கக்கூடாது.
(3) ஏதேனும் ஒரு நடவடிக்கையானது உள் விதி (1) அல்லது உள்விதி (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுக்கு இயல்புடையதாக
உள்ளதா என்பது பற்றி கேள்வி ஏதேனும் எழுமானால், அது பற்றிய அரசின் முடிவே இறுதியானதாகும்.
(4) (அ) அரசுப் பணியாளர் எவரும் வங்கித் தொழில் நடத்துவதற்கு உரியவாறு ஏற்பளிக்கப்பெற்ற ஒரு வங்கியில் அல்லது ஒர நிறுவனத்தில்
அல்லது அரசின் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் நடைமுறையில்
வங்கி நடவடிக்கைகளை
கொண்டிருப்பதல்லாமல் தானாக அல்லது தன் குடுமு;ப உறுப்பினர் எடிவரேனும் ஒருவர் மூலமாக அல்லது தன் சார்பிலே செயல்படும் வேறொருவர் மூலமாக கீழ்க்காணும்
நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.
(i) தனது தல அதிகார எல்லைக்குள் அமைந்த எவரேனும் ஒருவருக்கு அல்லது ஒருவரிடமிருந்து அல்லது அலுவல்முறை செயல்பாடுகளைக் கொண்டுள்ள ஒருவரிடம் முதன்மையாளர் அல்லது முகவர் என்ற முறையில் பணம் கொடுக்கல் அல்லது வாங்கல் அல்லது வேறு வகையில்: அத்தகையவரிடம் பயன்நோக்கிலான
ஏதேனும் கடப்பாட்டில்
தன்னை ஈடுபடுத்திக்
கொள்ளல் அல்லது
(ii) யாரேனும் ஒருவருக்கு வட்டிக்குப் பணமாக அல்லது பொருளாக் கொடுத்தல் அல்லது அவ்வாறு திரும்பப் பெறுதல்
மேலும் வரம்புரையாக,
தொகுதி டீஇஊ ரூ னுயினைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் விதி 7, துணை விதி (5)-ல் வகை செய்யப்பட்டுள்ள வகுத்தமைக்கப்பட்ட அதிகாரியின் முன் ஒப்பளிப்புடன் உறவினர் அல்லது தனிப்பட்ட நண்பர் ஒருவரிடமிருந்து
அடுக்ககம் (அ) கட்டி முடிக்கப்பட்ட வீடு (அ) மனை (அ) வீடு கட்டுவதற்காக ரூ.3 லட்சத்திற்கு மேற்படாத தொகையினை வட்டியின்றி பெறலாம்.
மேலும் வரம்புரையாக
இந்த துணை விதியில் கண்டுள்ளது எதுவும் அரசின் முன் ஒப்பளிப்புடன்
அரசு ஊழியரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைப் பொறுத்து பொருந்தாது.
(அ.நி.எண்.39 ப.ம.நி.சீ (அ) துறை, நாள். 9.3.2010: அமல் 9.3.2010)
ஆயினும், அரசின் முன் அனுமதியுடன் அரசுப் பணியாளர் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பானவற்றுக்கு இந்த உள் விதியிலமைந்த எதுவும் பொருந்தாது.
(அ) அரசுப் பணியாளர் எவரும் தாமோ, தன்னுடைய குடும்ப உறுப்பினர் அல்லது தன் பொருட்டுச் செயற்படுபவர் மூலமாகவோ, அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல் ; அவரது மொத்த மாத தொகைக்கு மேற்பட்ட எந்தத் தொகையையும் தனிப்பட்ட எவருக்கும் கொடுக்கவோ அவரிடமிருந்து பெறவோ கூடாது.
(அரசு ஆணை நிலை எண். 225, ப.ம.நிசீ.துறை நாள்.11.9.1998)
வரம்புரையாக தொகுதி டீ, ஊ ரூ னு யினைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் விதி 7, துணை விதி (5)-ல் வகை செய்யப்பட்டுள்ள வகுத்தமைக்கப்பட்ட அதிகாரியின் முன் ஒப்பளிப்புடன் எந்தவொரு தனிப்பட்ட நபரிடமிருந்து, அடுக்ககம் (அ) கட்டி முடிக்கப்பட்ட வீடு (அ) மனை (அ) வீடு கட்டுவதற்காக ரூ.3 லட்சத்திற்கு மேற்பாடாத தொகையினை வட்டி இன்றி பெறலாம்.
(அ.நி.எண்.39 ப.ம.நி.சீ (யு)துறை, நாள். 9.3.2010: அமல் 9.3.2010)
(ஆ) உள் விதி (2) அல்லது உள் விதி (4)-ன் ஏற்பாடுகளில்
எதனையேனும் மீறவைக்கும்
தன்மையிலான பணியிடத்திற்கு
நியமனம் அல்லது மாற்றம் செய்யப்படும் அரசுப்பணியாளர்
அச்சூழ்நிலை குறித்து அரசுக்கு உடனடியாகத் தெரிவித்து, அதன் மீது அரசு பிறப்பிக்கும் ஆணைப்படி செயற்பட வேண்டும். ‘இ” அல்லது ‘ஈ” பிரிவைச் சார்ந்த அரசுப் பணியாளர் இந்த உள்விதியில் குறிப்பிடப்பட்டவாறு உரிய துறைத்தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
(5) தமிழ்நாடு நீதித்துறை அலுவலகப் பணித் தொகுதியைச் சார்ந்த எவரும் மாவட்ட நீதிபதியின் எழுத்து மூலமான அனுமதியை பெறாமல் கீழ்க்காண்பவற்றை
செய்தல் கூடாது:-
(i) ஏலம் விடத்தக்க ஏதேனும் உரிமைக் கோரிக்கையை அல்லது தீர்ப்பாணையைத் தன் பெயரில் மாற்றம் செய்து கொள்ளுதல் :- அல்லது
(ii) தனக்குத் தனிப்பட்ட முறையில் நேரடித் தொடர்பு இல்லாத ஏதேனும் வழக்கில் தன்னைத் தொடர்புப்படுத்தி கொள்ளல்.
(6) கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகின்ற அல்லது தணிக்கை செய்கின்ற அரசுப் பணியாளர்கள் நீங்கலாக மற்ற எல்லாவகை அரசுப்பணியாளர்களும் தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி (வரையறுக்கப்பெற்றது) பிற மைய கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உட்பட வேளாண் வங்கி அல்லாத கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாகி வைப்பீடுகள்
செய்யலாம்.
(7) (அ) கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகின்ற அல்லது தணிக்கை செய்கின்ற அரசுப் பணியாளர்கள் தங்கள் நலனுக்கெனத்
தனியாக பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களில்
உறுப்பினர்களாகி வைப்பீடுகள்
செய்யலாம்.
(ஆ) கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகின்ற அல்லது தணிக்கை செய்கின்ற அரசுப்பணியாளர்கள் தமிழ்நாடு மாநிலக்கூட்டுறவு
வங்கியில் ( வரையறுக்கப்பெற்றது) அல்லது எந்தவொரு மைய கூட்டுறவு வங்கியிலும்
அல்லது நகர்ப்புற கூட்டுறவு வங்கியிலும் வைப்பீடுகள்
செய்து அந்நிறுவனங்களிலிருந்து பாதுகாப்பு அல்லது பிணையக் கடன்கள் பெறலாம். ஆனால் அவர்கள் அவ்வங்கிகளின்
நேரடித் தணிக்கையில்
அல்லது மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருக்கக் கூடாது.
(8) அரசு பணியாளர்கள்
ஒவ்வொரு வகுப்பினரும்
தமிழ்நாடு கூட்டுறவு மாநில மைய நிலவள வங்கி (வரையறுக்கப் பெற்றது) யில் வைப்பீடுகள் செய்யலாம் மற்றும் கடன் ஈட்டுறுதிப்
பத்திரங்கள் வாங்கலாம். ஆனால் அந்த வங்கியல் எந்த பதவியையும் வகிக்கவோ அதன் மேலாண்மையில் எத்தகைய பங்கும் கொள்ளவோ கூடாது.
(9) அரசுப் பணியாளர், தன்னுடைய துறைத் தலைவரின் முன் ஒப்பளிப்புடன் நிலவள வங்கியில் அல்லது வேளாண் பணிக் கூட்டுறவு சங்கத்தில் (உழவர்கள் பணிக் கூட்டுறவு சங்கம், வேளாண் வங்கி மற்றும் ஊரக வங்கி உட்பட) அல்லது தொடக்கக் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உறுப்பினராகலாம். அருப்பினும் அவர் அவ்வங்கி/ சங்க எல்லைக்குட்பட்ட
பகுதியில் ஏற்கனவே சொந்தமாக நிலம் பெற்றிருந்து,
அவ்வங்கியால்/ சங்கத்தால் அளிக்கப்படும் சேவைகளைப் பயன்படுத்திக்
கொள்வதில் விருப்பமுடையவராகவும், அதில் எப்பதவியும்
வகிக்காதவராகவும், அதன் மேலாண்மையில் பங்கு கொள்ளாதவராகவும்
இருக்க வேண்டும்.
இருப்பினும் அச்சங்கத்தில்
/ அவ்வங்கியில் நேரிடையாக தணிக்கை, நிருவாகம் அல்லது மேற்பார்வைப் பணியில் ஈடுபட்டுள்ள
அரசுப் பணியாளருக்கு
அத்தகைய ஒப்பளிப்பு ஏதும் வழங்கப்படமாட்டாது.
(10) கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகின்ற அல்லது தணிக்கை செய்கின்ற அரசு பணியாளர், தாம் உறுப்பினராக
உள்ள நிலவள வங்கி அல்லது வேளாண் பணிக்கூட்டுறவு சங்கம் (உழவாக்ள். பணிக் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு விற்பசைன் சங்கம் மற்றும் ஊரக வங்கி உட்பட) அல்லது தொடக்க கூட்டுறவு விற்பனை சங்க எல்லைக்குட்பட்ட பகுதியில் நியமிக்கப்பட்டிருப்பின் அல்லது மாற்றப்பட்டிருப்பின் அவர் அவ்விரத்தினைத்
தன்னுடைய உடனடி மேலலுவலருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். அம்மேலலுவலர் தமக்கு அதிகாரமிரப்பின் தொடர்புடைய அவ்வங்கி அல்லது சங்கத்தின் எல்லைக்கப்பாற்பட்ட பகுதிக்கு அந்த அரசுப் பணியாளரை மாற்ற வேண்டும். அவருக்கு அந்த அதிகாரமில்லையெனில் அந்த அதிகாரமுடைய அலுவலரின் ஆணைக்காக அதனை அனுப்ப வேண்டும்.
(11) கூட்டுறவுத் துறையில் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் உட்பட எல்லாவகை அரசுப் பணியாளர்களுக்கும் கூட்டுறவு வீடுகட்டும்
சங்கங்களில் அல்லது வீடு அடைமானச் சங்கங்களில்
அல்லது கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கங்களில்
உறுப்பினர்களாகலாம்.
விளக்கம் :-மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்கள் என்பவை தங்கள் உறுப்பினர்களுக்காக வீடு கட்டுவதையும்,
தங்கள் உறுப்பினர்களுக்கு அவர்கள் வீடு கட்டி கொள்ள கடன் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட எல்லாவகையான கூட்டுறவு சங்கங்களையும்
உள்ளடக்கியனவாகும்.
(12) கூறு ((அ)-இன் உள் விதி (7)இல் உள்ள எதுவும் எவ்வாறிருந்தபோதும், கூட்டுறவு துறையில் பணியில் உள்ள அரசுப் பணியாளர் கூட்டுறவு பண்டசாலைச்சங்கத்தில் உறுப்பினராகலாம்.
அதன் பயனாக அவர் அச்சங்கத்திலிருந்து மளிகைப் பொருள்களையும், மற்ற பொருள்களையும்
பெறலாம். ஆனால் அவர் அச்சங்கத்தில் எப்பதவியையும்
வகிக்கவோ, அச்சங்க நடவடிக்கைகளை மேலாண்மை செய்ய நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவிலும் பணியாற்றவோ தகுதியுடையவராவார்.
(13) இவ்விதியிலுள்ள எதுவும் எப்படியிருந்தபோதிலும், அரசுப் பணியாளர் தான் உறுப்பினராக
உள்ள கூட்டுறவுச்
சங்கத்திலிருந்து பணம் கடன் பெறலாம். ஆனால் அக்கடன் வாங்கல் என்பது ஆள் பிணையத்தின் அடிப்படையாக
இருப்பின், அப்பிணையாளர்,
கடன் பெறுபவரின் தகுதிநிலைக்குச் சமமானவராக அல்லது மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
(14) பணம் கொடுக்கல், வாங்கல் மீதான தடையானது அளவுக்கு மீறிய குறைந்த வீதங்களில், அல்லது போதிய காரணங்களின்றி சலுகையில் அளிக்கப்படும்
கடன்கள், கடன் பொறுப்பில் விற்பனை, முன்பணங்கள்
, பொருள்கள் வழங்கல் அல்லது குடியிருப்பு வசதியளித்தல்
மற்றும் மிகவும் குறைந்த விலையில் சொத்துகளை விற்றல் ஆகியவற்றுக்கு பொருந்தும்.
(15) பணம் கடன் கொடுக்கும் அரசு பணியாளர் நிறைவேற்றுநராக நிருவாகியாக அல்லது பொறுப்பாட்சியராகத் தனக்கு ஆதாயமோ நன்மையோ இல்லாமாலிருக்கிறார் என்பது அவரை இவ்விதியின் செயற்பாட்டிலிருந்து விலக்குவதாகாது.
(16) பணம் கடன் கொடுக்கும் தொழிலை முன்னோர் தொழிலாக கொண்டுள்ள இந்த கூட்டுக் குடும்பமொன்றைச் சார்ந்த அரசு பணியாளர் ஒருவர் இத்டையிலிருந்து விலக்களிக்கப்படுகின்றார். ஆனால் அவர் இந்தத் தொழிலில் முனைப்புடன் பங்கு கொள்ளாதவராகவும்,
தான் சார்ந்த இந்தக் கூட்டுக் குடும்பத்தினர்
தொழில் நடத்துகின்ற
மாவட்டத்தில் பணியாற்றாதவராகவும் இருத்தல் வேண்டும்.
(17) ஆசிரியர் பணியிலுள்ள அரசு பணியாளர் ஒருவர், மாணவரிடத்தில் அல்லது முன்னாள் மாணவரின் பெற்றோரிடத்தில் அல்லது காப்பாளரிடத்தில் அல்லது தான் பணிபுரியும் பள்ளி அல்லது கல்லூரியின் பணியாளரிடத்தில் அல்லது பணியாளர் அமைப்புடன் பணப்பயன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தடை செய்யப்படுகின்றார்.
By வழக்கறிஞர் சி.பி.சரவணன்
நன்றி : தினமணி நாளிதழ் - 23.10.2018