disalbe Right click

Monday, October 7, 2019

அறிவோம் ஐ.என்.எஸ்.டி.

அறிவோம் .என்.எஸ்.டி.
இந்தியாவில் நானோ டெக்னாலஜி மற்றும் நானோ சயின்ஸ் துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் செயல்படும் தன்னாட்சி நிறுவனம், இன்ஸ்டிடியூட் ஆப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி - .என்.எஸ்.டி.,!
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புகழ்பெற்ற ..எஸ்..ஆர்., நிறுவனத்திற்கு அருகே இடம் பெற்றுள்ள இந்நிறுவனம் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்படத் துவங்கியது.
முக்கியத்துவம்
அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய நானோ டெக்னாலஜி, அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் மற்றும் ஆராயும் ஒரு பிரத்யேக துறை என்று சுருக்கமாக சொன்னாலும், இதன் முக்கியத்துவம் அவ்வளவு சிறியதல்ல. கடுமையான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி அங்கம் வகிக்கும் என்று விஞ்ஞானிகளாலும், நிபுணர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பிரம்மாண்டம் என்றே சொல்ல வேண்டும்.
இது குறித்த ஆராய்ச்சிகளுக்கு உலக நாடுகளால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில், இந்தியாவில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அவசியம் உணரப்பட்டே .என்.எஸ்.டி., நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை. இது குறித்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.
.என்.எஸ்.டி., யின் அம்சங்கள்
உயிரியலாளர்கள், வேதியலாளர்கள், இயற்பியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மெட்டீரியல் சயின்ட்டிஸ்ட்ஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து நானோ தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முன்னெடுக்கும் பணியை மேற்கொள்கிறது. விவசாயம், நாட்டின் பாதுகாப்பு, சுகாதாரம், ஆற்றல், சுற்றுச்சூழல், நீர் ஆகியவற்றின் மேம்பாட்டிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது
மேலும், சுவச் பார்த் அபியான், சுவஸ்த் பாரத், ஸ்மார்ட் சிட்டீஸ், ஸ்மார்ட் வில்லேஜ்ஸ், மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களிலும், தொழில்நுட்ப உதவி புரிகிறது.
வழங்கப்படும் படிப்புகள்
பெரும்பாலும், ஆராய்ச்சி சார்ந்த பணிகளையே .என்.எஸ்.டி., மேற்கொள்வதால் 
நானோ டெக்னாலஜி   
 நானோ சயின்ஸ் சார்ந்த மெட்டீரியல்ஸ் பார் எனர்ஜி அப்ளிகேஷன்ஸ் 
       (போடோகேட்டலிஸ்ட்ஸ்
 எலக்ட்ரோ கேட்டலிஸ்ட்ஸ்
 சூப்பர் கெப்பாசிட்டர்ஸ்
 ஹைட்ரஜன் ஜெனரேஷன் அண்ட் ஸ்டோரேஜ்), 
 ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ் (ஆர்கானிக் / இன் ஆர்கானிக்), சென்சார்ஸ், தெரப்யூட்டிக்ஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி., படிப்பை வழங்குகிறது.
தகுதிகள்
உரிய பிரிவுகளில், எம்.எஸ்சி., எம்.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.பார்ம்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் / சி.எஸ்..ஆர்., / நெட் / ஜெஸ்ட் / .சி.எம்.ஆர்.,-ஜே.ஆர்.எப்., / டி.பி.எட்., -ஜே.ஆர்.எப்., போன்ற தகுதித்தேர்வில் போதிய மதிப்பெண் பெறுவதும் அவசியம்.
விபரங்களுக்கு: www.inst.ac.in
நன்றி : தினமலர் (கல்வி மலர்) நாளிதழ் - 04.10.2019

Saturday, October 5, 2019

வழக்குகளில் சமரசம் செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

வழக்குகளில் சமரசம் செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
ஏதோ ஒரு செயலினால் பாதிக்கப்பட்டவர், ஏதோ ஒரு வேகத்தில் எதிரி மீது குற்றம் சாட்டிஒன்ன என்ன செய்றேன் பார்!” என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவார். ஆனால், வழக்கின் போக்கு, அதற்கு ஆகின்ற செலவு, வீண் அலைச்சல்  மற்றும் அதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல் ஆகியவற்றைப் பார்த்துவிட்டுசமாதானமாக போய்விட்டால் என்ன?” என்று வாதி மற்றும் பிரதிவாதி ஆகிய இருவருமே ஒரு காலகட்டத்தில் நினைப்பதுண்டு. ஆனால், எல்லா வழக்கிலும் சமரசம் செய்துகொள்ள நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. சில வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டணை வழங்கியே தீர வேண்டும்! என்று சட்டம் சொல்கிறதுசமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள் எந்த சட்டப்பிரிவுக்குட்பட்டவை? அதற்கு வழக்குத்தொடுத்தவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் என்ன செய்ய வேண்டும்என்பதை கீழே காண்போம் வாருங்கள்
சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள்
சமரசம் செய்து கொள்ளும் குற்றங்களைப் (Compounding of Offences) பற்றி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 298, 323, 324, 341, 342, 352, 355, 358, 426, 427, 447, 448, 491, 497, 498, 500, 501, 502, 504, 506 மற்றும் 508 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த தரப்பினர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவரும் எதிரிகளும் உள்ளூர் பெரியவர்களின் முன்னிலையில் ஆஜராகி, வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாமென்று முடிவு மேற்கொண்டு, எழுத்து மூலமாக ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அதனைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 320(1)ன் கீழ்மனுத்தாக்கல் செய்தாலே போதுமானதாகும். அந்த மனுவில் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவரும், அனைத்து எதிரிகளும் கையொப்பம் செய்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் சமரசம்
இந்திய தண்டணைச் சட்டத்தின் பிரிவுகள் 324, 325, 335, 337, 338, 343, 344, 346, 354, 357, 379, 381, 403, 406, 407, 408, 411, 414, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 428, 429, 430, 451, 482, 483, 486, 494, 500 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் சமரசம் செய்து கொள்வதாக இருந்தால் எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடக்கின்றதோ அந்த நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
எந்த ஒரு வழக்கிலும் தீர்ப்பு சொன்ன பின்னரோ அல்லது ஒரு வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட பின்னரோ சமரசம் செய்து கொள்ள முடியாது.
நீதிமன்றம் என்ன செய்யும்?
சமரசத்தின் பொருட்டு மனுத்தாக்கல் செய்த பின்னர் நீதிபதி பாதிக்கப்பட்டவரை விசாரித்து அவர் வழக்கில் சமாதானமாக போக விரும்புவதை பதிவு செய்து கொண்டு எதிரிகளை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பார். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராக அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் வழக்கை சமரசம் செய்து கொள்ள முடியாது.
அது போன்ற சூழ்நிலையில் அவர் சார்பில் தந்தை அல்லது தாய் அல்லது காப்பாளர் சமரசம் செய்து கொள்ளலாம்.
சமரசம் செய்ய முடியாத குற்றங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் உயர்நீதிமன்றமோ அல்லது அமர்வு நீதிமன்றமோ சமரசம் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட நபருக்கு குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 401ன் கீழ் அனுமதி வழங்கலாம்.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.10.2019