அறிவோம் ஐ.என்.எஸ்.டி.
இந்தியாவில்
நானோ டெக்னாலஜி மற்றும் நானோ சயின்ஸ் துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் செயல்படும் தன்னாட்சி நிறுவனம், இன்ஸ்டிடியூட் ஆப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி - ஐ.என்.எஸ்.டி.,!
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புகழ்பெற்ற ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., நிறுவனத்திற்கு
அருகே இடம் பெற்றுள்ள
இந்நிறுவனம் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்படத் துவங்கியது.
முக்கியத்துவம்
அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய நானோ டெக்னாலஜி, அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு
அளவில் பொருட்களை கையாளும் மற்றும் ஆராயும் ஒரு பிரத்யேக துறை என்று சுருக்கமாக சொன்னாலும், இதன் முக்கியத்துவம் அவ்வளவு சிறியதல்ல. கடுமையான நோய்களுக்கு
சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி அங்கம் வகிக்கும் என்று விஞ்ஞானிகளாலும்,
நிபுணர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பிரம்மாண்டம் என்றே சொல்ல வேண்டும்.
இது குறித்த ஆராய்ச்சிகளுக்கு உலக நாடுகளால் அதிக முக்கியத்துவம்
அளிக்கப்படும் சூழலில், இந்தியாவில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜியில்
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அவசியம் உணரப்பட்டே ஐ.என்.எஸ்.டி., நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.
இது குறித்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.
ஐ.என்.எஸ்.டி., யின் அம்சங்கள்
உயிரியலாளர்கள்,
வேதியலாளர்கள், இயற்பியலாளர்கள்,
பொறியாளர்கள் மற்றும் மெட்டீரியல் சயின்ட்டிஸ்ட்ஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து நானோ தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு
முன்னெடுக்கும் பணியை மேற்கொள்கிறது. விவசாயம், நாட்டின் பாதுகாப்பு, சுகாதாரம், ஆற்றல், சுற்றுச்சூழல், நீர் ஆகியவற்றின்
மேம்பாட்டிலும், தொழில்நுட்ப
வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
மேலும், சுவச் பார்த் அபியான், சுவஸ்த் பாரத், ஸ்மார்ட் சிட்டீஸ், ஸ்மார்ட் வில்லேஜ்ஸ், மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களிலும், தொழில்நுட்ப உதவி புரிகிறது.
மேலும், சுவச் பார்த் அபியான், சுவஸ்த் பாரத், ஸ்மார்ட் சிட்டீஸ், ஸ்மார்ட் வில்லேஜ்ஸ், மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களிலும், தொழில்நுட்ப உதவி புரிகிறது.
வழங்கப்படும்
படிப்புகள்
பெரும்பாலும்,
ஆராய்ச்சி சார்ந்த பணிகளையே ஐ.என்.எஸ்.டி., மேற்கொள்வதால்
➽ நானோ டெக்னாலஜி
➽ சூப்பர் கெப்பாசிட்டர்ஸ்,
➽ ஹைட்ரஜன் ஜெனரேஷன் அண்ட் ஸ்டோரேஜ்),
➽ ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ் (ஆர்கானிக் / இன் ஆர்கானிக்), சென்சார்ஸ், தெரப்யூட்டிக்ஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி., படிப்பை வழங்குகிறது.
➽ நானோ டெக்னாலஜி
➽ நானோ சயின்ஸ் சார்ந்த மெட்டீரியல்ஸ் பார் எனர்ஜி அப்ளிகேஷன்ஸ்
(போடோகேட்டலிஸ்ட்ஸ்,
➽ எலக்ட்ரோ கேட்டலிஸ்ட்ஸ், ➽ சூப்பர் கெப்பாசிட்டர்ஸ்,
➽ ஹைட்ரஜன் ஜெனரேஷன் அண்ட் ஸ்டோரேஜ்),
➽ ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ் (ஆர்கானிக் / இன் ஆர்கானிக்), சென்சார்ஸ், தெரப்யூட்டிக்ஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி., படிப்பை வழங்குகிறது.
தகுதிகள்:
உரிய பிரிவுகளில், எம்.எஸ்சி., எம்.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.பார்ம்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் / சி.எஸ்.ஐ.ஆர்., / நெட் / ஜெஸ்ட் / ஐ.சி.எம்.ஆர்.,-ஜே.ஆர்.எப்., / டி.பி.எட்., -ஜே.ஆர்.எப்., போன்ற தகுதித்தேர்வில் போதிய மதிப்பெண் பெறுவதும் அவசியம்.

நன்றி : தினமலர் (கல்வி மலர்) நாளிதழ் - 04.10.2019