அன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.in”
disalbe Right click
Sunday, November 8, 2020
Friday, August 7, 2020
மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்
மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்
1. வருவாய் ஆய்வாளர்கள்
நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடைய
பணிகள் மற்றும் பணி அமைப்பினை மேற்பார்வையிடுதல்.
2. வருவாய் வரி வசூல், கடன்கள் வசூல் மற்றும் இதர துறைகளுக்கும்
வசூலித்துத்தர தக்க இனங்கள் ஆகியவற்றின் வசூல் பணிகளை ஆய்வு செய்தல்.
3. கிராமக் கணக்குகளை தணிக்கையிடுதல்.
4. “ஏ” மற்றும் “பி” மெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான
ஆணைகளை பிறப்பித்தல்.
5. புறம்போக்கு இடங்களிலுள்ள மரங்களை தணிக்கை செய்தல் மற்றும் அவற்றில் மகசூலை ஏலம்விட நடவடிக்கை எடுத்தல்.
6. முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாறிகளின் விவரம் சரிபார்த்தல்.
7. பட்டா பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
8. பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்
9. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
10. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல்போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து
நடவடிக்கை எடுத்தல்.
11. வரி வசூல்காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
12. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும்
கணக்குகளை சரிபார்த்து
அங்கீகரித்தல்.
13 பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கை செய்தல்.
14. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நிலக்குத்தகை நிலமாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தல் மற்றும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தல்.
15. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
16. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவர் என்பதை சரிபார்த்தல்.
17. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.
18. பயிர்கள் நிலையை மேல் பயிராய்வு செய்தல்.
19. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, வரி தள்ளுபடி இனங்கள்
மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.
20. வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல்.
21. நகல்கள் கேட்டுவரும் மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.
22. சாதிச் சான்று வழங்குதல் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தவிர).
23. நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி ஆணைகள் வெளியிட ஆவன செய்தல்.
24. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் குறித்த ஆணைகள் பிறப்பித்தல்.
25. கால்நடைப் பட்டிகளை பார்வையிடல், மற்றும் அது தொடர்பாக கணக்குகளை சரிபார்த்தல், கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின் நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.
26. மழைமானிகள் தணிக்கையிடுதல்.
27. கிராமக் கல் டெப்போக்கள் மற்றும் நில அளவை கற்களை தணிக்கை செய்தல்.
28. அரசு புறம்போக்கு
நிலங்களை தணிக்கையிட்டு
ஆட்சேபனையுள்ள ஆக்கிரமணங்களை
கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.
29. வருவாய் ஆய்வாளர்களின் தன் பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.
30. வருவாய் ஆய்வாளரின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
நன்றி : http://tnroadgl.com