disalbe Right click

Sunday, June 19, 2016

பிறவிக் கோளாறு (ஃபோலிக் அமிலக் குறைபாடு)


பிறவிக் கோளாறு - என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பிணி பெண்களுக்குஉயிர் காக்கும்  ஃபோலிக் அமிலம்!

கர்ப்பம் உறுதியானதுமே பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஃபோலிக் அமில மாத்திரைகள். அதன்அவசியம் உணராமல்  அலட்சியப்படுத்துகிற பெண்களுக்கு, ஃபோலிக் அமிலக் குறைபாடு எப்படிப்பட்ட பயங்கரங்களை ஏற்படுத்தலாம் என விளக்குகிறார்  மருத்துவர் நிவேதிதா.ஃபோலிக் அமிலம் என்பது ஒருவகையான பி வைட்டமின். புதிய செல்கள் உருவாக உடலுக்கு மிக  அத்தியாவசியமானது அது. எல்லா மக்களுக்குமே ஃபோலிக் அமிலம் அவசியம் என்றாலும் கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு  அது மிக மிக அவசியம். கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஒரு பெண்ணின் உடலில் போதிய அளவு ஃபோலிக்  அமிலம் இருக்குமானால், அது குழந்தையின் பிறவிக் கோளாறுகள் பலவற்றைத் தவிர்க்கும்.

ஃபோலிக் அமிலக் குறைபாடு என்ன செய்யும்?

குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் முதுகெலும்பை பாதிக்கும் Spina bifida  என்கிற இந்தப் பிரச்னையால் முதுகெலும்பு மட்டுமின்றி,  கால் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளின் இயக்கமும் பாதிக்கப்படும். இப்படிப் பிறக்கும்  குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பிரச்னைகள் தொடரும். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியிருக்கும். ஃபோலிக் அமிலக் குறைபாட்டால் உண்டாகிற Anencephaly பிரச்னை குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்.  இதனால் குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த உடனேயோ இறந்து போகலாம். போதுமான ஃபோலிக் அமிலம்  இருக்கும் பட்சத்தில் ரத்தசோகை, இதயக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் அபாயங்களும் தவிர்க்கப்படுகின்றன.

யாருக்குத் தேவை?

கர்ப்பமாகும் திட்டத்தில் இருக்கிற பெண்களுக்கு தினசரி 400 முதல் 800 மைக்ரோகிராம் அளவுக்கு ஃபோலிக் அமிலம் தேவை.  கர்ப்பமாகிற திட்டம் இல்லாதவர்களுக்கும் இதே அளவு எடுத்துக் கொள்கிற பட்சத்தில், பின்னாளில் அவர்களுக்குக் குழந்தைகள்  பிறக்கும் போது பிறவிக் கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து கர்ப்ப  காலம் முழுவதற்குமான ஃபோலிக் அமில மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் இல்லை, குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றிக்  கொண்டிருப்பவர்கள்கூட ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்.மூளை  வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தை பெற்ற பெண்கள், மறுபடி இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தால்...

பெண்ணின் குடும்பத்தில் யாருக்காவது Spina bifida பிரச்னை இருந்தால்...வலிப்பு நோய், டைப் 2 நீரிழிவு, ருமட்டாயிட்  ஆர்த்ரைட்டிஸ், கல்லீரல் கோளாறு, சிறுநீரக பாதிப்பு, சோரியாசிஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின்  ஆலோசனைக்குப் பிறகே அவர்களுக்குத் தேவையான ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவில் உண்டா?

காய்கறிகள், கீரைகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், முழு தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையிலேயே ஃபோலிக் அமிலம் நிறைய  உள்ளது. ஆனாலும் உணவின் மூலம் கிடைக்கிற அளவு மட்டுமே ஒருவருக்குப் போதுமானதாக இருக்காது. மருத்துவரின்  பரிந்துரைக்கு மேல் அளவுக்கதிகமான ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொண்டால் வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால்  தெரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. அதுவும் ஆபத்தானது.

- வி.லஷ்மி

 Date: 2016-02-05@ 15:39:34
நன்றி குங்குமம் டாக்டர்

மின்புகார் அளிக்க


மின்புகார் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
மின்வெட்டு அல்லது கோளாறு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1912 என்ற 24 மணி நேர ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மின் இணைப்பு, மின்வெட்டு, மின்கோளாறு உள்ளிட்ட புகார்களை அந்தந்த மாநில அரசுகளும், மின்வாரியமும் நிர்ணயித்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தான் நுகர்வோர் தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் மின்சாரம் சம்பந்தமான புகார்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இதனால் மின் நுகர்வோர் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் மின் புகார்களை தெரிவிக்க 1912 என்ற ஒரே எண்ணை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

கோவா தலைநகர் பனாஜியில் அனைத்து மாநில மின்சார துறை அமைச்சர்களின் இரு நாள் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அப்போது மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடு முழுவதும் ஒரே புகார் எண்ணை அமல்படுத்தும் புதிய முறையை அறிமுகம் செய்தார்.

1912 என்ற இந்த தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். இந்த எண்ணை மின் நுகர்வோர் தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தந்த மாநில அரசு துறைகளுக்கோ அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டு அறைக்கோ அழைப்பு செல்லும்.

அப்போது மின்சாரம் சம்பந்தமான புகார்களை தெரிவித்தால், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர். மேலும் புகார் சம்பந்தமான அனைத்து விவரங்களும் இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் கிடைக்கும்.

நேரடி கண்காணிப்பு

தவிர மின் உதவி எண்ணை நுகர்வோர் ஒருவர் தொடர்பு கொண்டால், அவரது பிரச்சினை என்ன? எப்பொழுது அவர் புகார் தெரிவித்தார். பிரச்சினையின் தீவிரம் என்ன? என அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும்.

மத்திய அரசும் நேரடியாக இந்த சேவையை கண்காணிக்கவுள்ளது. இதனால் 1912 தொலைபேசி சேவை மின் நுகர்வோருக்கு மிகுந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.06.2016

Thursday, June 16, 2016

கால், கை வலிப்பு வந்தால்


கால், கை வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

கட்டுக் கதையா உண்மையா? வலிப்பு ஏன்?

வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?..

இடது கண் துடித்தால் நல்லது நடக்கும், கை அரித்தால் பணம் வரும், புரை ஏறினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என  நம் உடல் மாற்றங்களுக்கு பேச்சுவழக்கில் பல்வேறு காரணங்களைச் சொல் வார்கள். இதை அப்படியே நம்புபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

இதெல்லாம் உண்மையா?

இதற்கான அறிவியல் காரணங்கள் என்ன?

யாருக்காவது வலிப்பு வந்தால் கையில் சாவிக்கொத்து அல்லது இரும்புக் கம்பியைத் திணிப்பார்கள். இந்தக் காட்சியை சினிமாக்களில் அடிக்கடி பார்த்திருப்போம். சாவியை கையில் வாங்கியதும் வலிப்பு கொஞ்சம், கொஞ்சமாக சரியாகிவிடும். இது உண்மையா? இரும்பைக் கையில் கொடுத்தால் வலிப்பு சரியாகிவிடுமா? வலிப்பு நோய் ஏன் வருகிறது என விளக்குகிறார் நரம்பியல் மருத்துவர் திலோத்தம்மாள்.

மூளையின் நரம்பணுக்கள் நியூரான்ஸ் (Neurons) என்று அழைக்கப்படுகின்றன. மூளை, நரம்புகள், நரம்பணுக்கள் போன்றவற்றில் மின்னோட்டம் சென்று கொண்டிருக்கும். இது இயல்பு. தானாகவோ, காரணமே இல்லாமலோ, அதிகப்படியான மின்னோட்டம் நரம்பணுக்களில் பாய்ந்தால், வலிப்பு வரும். அதாவது நரம்பணுக்களின் இயல்பான நிலையிலிருந்து அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டால், அதுவே வலிப்பு நோய்.

கை, கால், வாய் போன்றவை கோணலாக இழுத்துக்கொள்வது மட்டும் வலிப்பு அல்ல. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இரண்டு நிமிடங்கள் எல்லாம் மறந்து, நாம் எங்கு, என்ன செய்கிறோம் என யோசித்து பின் நினைவுக்கு வந்தால், அதுவும்கூட வலிப்புதான். கண் முன்னால் வண்டி ஓடுவதுபோல தெரிவது, திடீர் வெளிச்சம் வருவது  என வலிப்பு வெவ்வேறு வடிவத்தில் வரலாம்.

அடிக்கடி வலிப்பு வந்தால் மட்டுமே, அவர் வலிப்பு நோயாளி. ஒரே ஒருமுறை வலிப்பு வந்தால், அவர் வலிப்பு நோயாளி கிடையாது. 

இரும்பைக் கையில் கொடுத்தால், வலிப்பு சரியாகிவிடாது. அதிகப்படியான மின்னோட்டம் பாய்வது சில நிமிடங்களே நீடிக்கும், அதன் பின்பு தானாகவே சரியாகிவிடும். மின்னோட்டம் சரியாகும்போது வலிப்பு நின்றுவிடும்.

 வலிப்பு வந்தவரை ஒருபக்கமாக திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். மல்லாந்து படுக்கவைத்தால், வாயில் நுரை தள்ளினாலோ, வாந்தி எடுத்தாலோ, அவை நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு  அதிகம். எனவே, கவனம் தேவை.

 கை, கால்களை அழுத்திப் பிடித்தல், நோயாளியின் மேல் ஏறி உட்காருதல், வாயில் எதையாவது அடைத்து வைத்தல், இரும்புப் பொருட்களை பிடிக்கக் கொடுத்தல் போன்றவற்றை செய்யவே கூடாது.

 அருகில் நோயாளியைக் காயப்படுத்தும் சூழல் இருந்தால் மட்டுமே, நோயாளிக்கு ஆதரவாக மென்மையாகப் பிடித்து அவரை நகர்த்தலாம். இறுக்கமான ஆடைகளைத் தளர்வுபடுத்தலாம்.

 சுற்றிலும் கூட்டமாக நின்று, சுவாசிப்பதை  சிரமப்படுத்தக் கூடாது. வீடு எனில் கதவு, ஜன்னல் அனைத்தையும் திறந்துவைக்கலாம்.

 முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. மயக்கத்தில் இருக்கும்போது குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. நினைவுக்கு வந்த பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொடுக்கலாம்.

-------------------------------------------------------------------ப்ரீத்தி

நன்றி : டாக்டர்விகடன் - 16.01.2015

ஜப்பானில் செலவின்றி படிக்க


ஜப்பானில் செலவின்றி படிக்க என்ன செய்ய வேண்டும்?
ஜப்பான் அரசின், எம்.இ.எக்ஸ்.டி., என்ற கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 2017ம் ஆண்டிற்கான சர்வதேச கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது.

தகுதிகள்:
 பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏப்ரல் 2, 1995 - ஏப்ரல் 1, 2000ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

சிறப்பு பயிற்சி கல்லூரி (3 ஆண்டுகள்): 
தொழில்நுட்பம், சுய கவனிப்பு மற்றும் உணவூட்டவியல், கல்வி மற்றும் நலத்துறை, வர்த்தகம், ஆடை வடிவமைத்தல் மற்றும் குடும்ப பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பொதுக்கல்வி உள்ளிட்ட படிப்புகள்.

தொழில்நுட்ப கல்லூரி (4 ஆண்டுகள்): 
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் அண்ட் நெட்வர்க் இன்ஜினியரிங், மெட்டீரியல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக் அண்ட் சிவில் இன்ஜினியரிங், மெரைன் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகம் (5 ஆண்டுகள்): 
சட்டம், அரசியல், ஆசிரியரியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் அறிவியல், மின் மற்றும் மின்னணு, மெக்கானிக்கல், கட்டடக்கலை மற்றும் சிவில் உள்ளிட்டவை.

விதிமுறைகள்: 
ஜப்பான் அரசு நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, கல்விக்கட்டணம், விமானக் கட்டணம் (தோராயமாக, மாதம் 71 ஆயிரம் ரூபாய்) உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சி காலத்தில், முதல் ஆண்டு ஜப்பானிய மொழியை கண்டிப்பாக பயில வேண்டும். மீதமுள்ள காலத்தில் மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் தொடர்புடைய பட்டப் படிப்புகளை அந்தந்த கல்லூரிகளில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17, 2016

மேலும் விவரங்களுக்கு:

 www.in.embjapan.go.jp ,

ஜப்பானிய தூதரக வளாகம்
(கலாசாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறை), சென்னை.

தொலைபேசி: 044- 24323860,
                           044-24323863.

நன்றி : தினமலர் - கல்வி மலர் - 16.06.2016

Tuesday, June 14, 2016

வருமானவரி கணக்குத் தாக்கல்


வருமானவரி கணக்குத் தாக்கல் - என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி கணக்குத் தாக்கல்… புதிய மாற்றங்களை கவனியுங்கள்! 
ஏ டு இசட் டிப்ஸ்

 வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது நுணுக்கமான பல விஷயங்களை கவனிக்க வேண்டும். எனவேதான், ஒரு ஆடிட்டரின் துணையோடு இதை செய்ய முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஆனால், சிற்சில விஷயங்களை உங்களால் கவனமாக செய்ய முடியும் எனில், நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் ரீஃபண்ட் கோரிப் பெறுவதும் சுலபமாகிவிட்டது.

ஆனால், இதை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது யார் எந்தப் படிவத்தை உபயோகிக்க வேண்டும், கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உள்ள மாறுதல்கள் என்ன, பொதுவாக ஏற்படக்கூடிய தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில், நிதி ஆண்டு 2015-16, மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2016-17-க்கான விவரங்களை பார்ப்போம்.

யாருக்கு எந்தப் படிவம்?

ஐடிஆர் 1 (சகஜ்) – ITR 1 (SAHAJ)

தனிநபர்கள் – இவர்களின் வருமானம் பின்வரும் வகையைச் சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 1 படிவம்தான்.

1. பென்ஷன் அல்லது சம்பளம்.

2. வீட்டு வாடகை – முன்வருடத்திய இழப்புக்களை (carry forward loss) இவ்வாண்டுக்கு கொண்டு வரப்படாததாக இருக்க வேண்டும். ஒரே ஒரு சொந்த வீடு மட்டும் தான் இருக்க வேண்டும்.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவைகளிலிருந்து வருமானம் இருக்கக்கூடாது.

4. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

5. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணமும் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது (Double Taxation Relief).

ஐடிஆர் 2 – (ITR 2)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப (HUF) அமைப்புக்களும் – வருமானம் பின்வரும் வகை சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 2 படிவம்தான்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால். 

3. முதலீட்டு வரவு (Capital  gains)

4. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம்

5. தனிநபர்கள், இந்தியர்களாக கருதப்பட்டு வெளிநாட்டு சொத்துக்கள் இருந்தால் அல்லது வெளிநாட்டு வருமானம் வந்தால்.

ஐடிஆர் 2ஏ ( ITR 2A)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்களும் – வருமானம் இந்த வகை சார்ந்ததாக இருந்தால்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை  –  ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வந்தாலும்

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் சேர்த்து

4. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணம் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது

5. வெளிநாட்டில் சொத்து அல்லது வெளிநாட்டு வருமானம் இருக்கக்கூடாது

ஐடிஆர் 4 எஸ் (ITR 4S -SUGAM)

தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களாக இருக்கக்கூடாது

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – இதில் முன்வருடத்திய நஷ்டம் இருக்கக் கூடாது.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் லாட்டரி குதிரைப் பந்தயம் தவிர்த்து.

4. தொழில் வருமானம் – இந்த வருமானம் செக்‌ஷன் 44 AD அல்லது செக்‌ஷன் 44 AE-ன் கீழ் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.

5. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. செக்‌ஷன் 90/91 அடியில் நிவாரணம் கேட்கப்பட்டிருக்கக் கூடாது.


ஐடிஆர்  3 (ITR 3)

தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புக்கள், பார்டனர்ஷிப் நிறுவனங்களில் பார்ட்னராக இருந்து இவர்கள் வேறு தனி உரிமை (proprietorship) நிறுவனத்திலிருந்து வருமானம் இல்லாது மற்றும் இவர்களின் வருமானம், வட்டி, கமிஷன் அல்லது ஊதியம் மற்றும் போனஸ், இப்படி ஒன்றாக இருக்குமென்றால்.

ஐடிஆர் 4 (ITR 4)

இது தனி உரிமை நிபுணத்துவ வணிகம் (proprietary business profession) நடத்துபவர்களுக்கு. வருமான வரம்பு கிடையாது. சம்பளம், வீட்டு வாடகை, மற்ற எல்லாவித வருமானங்களும், குதிரைப் பந்தயம் லாட்டரி உட்பட, இந்தப் படிவத்தில் காட்டலாம்.

இதுவரை குறிப்பிட்டவை தனிநபர்களுக்கான படிவங்கள். இவை தவிர, ஐடிஆர் 5, 6, 7 படிவங்கள் இருக்கின்றன. அவை முற்றிலும் நிறுவனங் களுக்கானவை என்பதால் அவற்றை விட்டுவிடலாம். 

இந்த வருடம் என்ன மாற்றங்கள்..?

இந்த வருடம் என்ன வகை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்று பார்ப்போம்.

1.  வரி செலுத்துபவரின் வருமானம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்குமானால், 
ஷெட்யூல் ஏஎல் (AL) பூர்த்தி செய்யவேண்டும். இந்த ஷெட்யூல் தனிநபரின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் கணக்காகும். இது ITR 1, 2, 2A, 3, 4, 4S படிவங்களுக்கும் பொருந்தும். அதாவது, 31.3.2016 நிலவரப்படி இருக்கும் நிலம், வீடு, கையிருப்பு பணம், நகை, தங்கம், வாகனம் (படகு, விமானம்) தவிர, இந்தப் பொருட்களின் மீதான கடன்.

ஏஎல் ஷெட்யூலில்  தரப்பட வேண்டிய சொத்துக்கள் அவை வாங்கப்பட்ட விலையில் காண் பிக்கப்படவேண்டும். அவை வெகுமதியால் அல்லது மரபுரிமை யால் பெற்றிருந்தால் அதன் முன் உரிமையாளரின் வாங்கப்பட்ட விலையைக் குறிப்பிட வேண்டும்.

2. வணிக அறக்கட்டளை அல்லது முதலீட்டு நிதியிலிருந்து (Business Trust or investment fund) பெறப்பட்ட வருமானம். 
ஷெட் யூல் பி.டி1-ல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது ஐடிஆர் 1, 2, 2ஏ, 3, 4-க்கு பொருந்தும்.

3. மூலத்தில் வரிப் பிடித்தம் (Tax Collected at Source – TCS): 
இந்த விவரங்கள் ஷெட்யூல் டிசிஎஸ்-ல் கொடுக்கலாம். ஐடிஆர் 1, 2, 2 ஏ-க்கு பொருந்தும். ரூ. 2 லட்சத்திற்கு மேல் தங்கம் அல்லது ரூ. 5 லட்சத்திற்கு மேல் நகை, ரொக்கம் கொடுத்து வாங்கும்போது, விற்பவர் நம்மிடம் அந்த தங்கத்தின் மேல் வரி விதித்து அதை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார். டிடிஎஸ் போல, இது டிசிஎஸ். போன வருடம் வரை இதற்கு படிவத்தில் இடம் இல்லாதிருந்தது. இப்போது படிவம் மாறுதலால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.


4 ஐசிடிஎஸ் (ICDS – Income computation and Disclosure Statement) – 
இது ஐடிஆர்4-க்கு பொருந்தும். இதை வர்த்தகத்தில் வரும் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்வது என சில விதிமுறைகள், சர்வதேச கணக்கியல் முறைப்படி (international accounting standard) அமைக்கப்பட்டுள்ளது. காண்பிக்கப்பட்ட வருமானக் கணக்கின்படி இதில் ஏதேனும் மாறுதல் இருப்பின், அதை இந்த ஷெட்யூலில் காண்பிக்க வேண்டும்.

ஐசிடிஎஸ் என்பது தனி மனித வருமானம் காட்டப்படும்போது வரும். உதாரணமாக, ரூ.10 லட்சம் டெபாசிட் மார்ச் மாதம் 20-ம் தேதி போடப்படுவதினால் அந்த வருட வட்டி வருமானத்தில் இந்த 11 நாட்களுக்கான வட்டி காட்டப்படாமல் அடுத்த வருடம் காண்பிக்கப்படும். ஆனால், சர்வதேச கணக்கியல் முறைப்படி, அக்குரூட் (Accrued) என்று காட்டப்பட்டு, இந்த வருட வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

செக்‌ஷன் 80 சிசிடி (1பி) {CCD(1B)}  கீழ் ரூ.50,000 வரை கூடுதல் வரிச் சலுகை உண்டு. அதாவது, தேசிய பென்ஷன் முறையில் (National Pension Scheme) இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டால். இதற்கான கூடுதல் இடமும் இந்தப் படிவத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவை தவிர, கூட்டாண்மை நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களுக்கான (Partnership, Trust, companies) மாறுதல்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாலும், அவை எல்லாம் நிறுவனங்களுக்கானவை என்பதால் அவற்றைப் பற்றி நாம் இங்கே விவரிக்கவில்லை. 
புதிய படிவங்களும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் கவனித்து வரி கணக்குத் தாக்கல் செய்வது அவசியம்!

லதா ரகுநாதன், ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.

நன்றி : நாணயம் விகடன் - 12.06.2016

வங்கிக் கடனுக்கான இ.எம்.ஐ. கணக்கு


வங்கிக் கடனுக்கான இ.எம்.ஐ. கணக்கு - என்ன செய்ய வேண்டும்?

'கடனின் மீதான வாழ்க்கை' என்பது தற்போதைய காலத்தில் இயல்பான ஒரு விஷயமாகி விட்டது. உங்களுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களுக்கு வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் எளிதாகக் கடன் அளிக்கிறது. வீடு முதல் தொலைக்காட்சி, மடிக்கணினி போன்ற வீட்டுப் பொருட்கள் வரை உடனடியாகக் கடன்கள் கிடைக்கிறது.

 நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மொத்த தொகையில் நீங்கள் சிறிய அளவிலான தொகையை முதலிலேயே செலுத்த வேண்டும் (முன்தொகை). மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்றுள்ள கடன் மூலமாக அடைக்கலாம் (Full payment on loan).

இ.எம்.ஐ.(Equated Monthly Installment - EMI)
நீங்கள் வாங்கும் இத்தகைய கடனைக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை செலுத்த வங்கி அல்லது நிதிநிறுவனங்கள் அனுமதி அளிக்கிறது. இந்தக் கடன் தொகை சமமான அளவில் சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றை ஒவ்வொரு மாதமும் கட்டியாக வேண்டும். இதைத் தான் மாத சுலபத் தவணை (இ.எம்.ஐ) என அழைக்கிறார்கள்.

கணக்கிடும் முறை 
இருப்பினும், இந்த மாத சுலபத் தவணைகளை வங்கிகள் எப்படிக் கணக்கிடுகிறது என்பதைச் சிலர் புரிந்து கொள்வதில்லை. இந்தக் கணக்கிடுதல் முறையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாமா? 

இ.எம்.ஐ. எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி விளக்கும் சில குறிப்புகள் இதோ:

சமமான மாதாந்திர தவணை 
இ.எம்.ஐ. என்பது மாதாமாதம் வங்கிக் கட்ட வேண்டிய நிலையான ஒரு தொகையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த கடனையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அடைத்து விடலாம். கடனின் மொத்த தொகையை அசல் (ப்ரின்சிபில்) என அழைப்பார்கள். கடன் வழங்கும் சேவைக்காக, அசல் தொகை மீது வங்கி வட்டி வசூலிக்கும்.

வங்கியில் இருந்து ஒருவர் வாங்கும் மொத்த கடனான அசல் தொகையின் மீது தான் இ.எம்.ஐ. தொகைக்கான கணக்கீடு செய்யப்படும்.

இ.எம்.ஐ.-யில் என்ன இருக்கும்? 
ஒவ்வொரு இ.எம்.ஐ. தொகையிலும் அசலின் ஒரு பங்கும், அதனுடன் வட்டி தொகையும் அடங்கியிருக்கும். அதனால், இ.எம்.ஐ.-யின் ஒவ்வொரு தவணையை நீங்கள் கட்டும் போதும், காலப்போக்கில் அசலும் வட்டியும் குறையத் தொடங்கும்.

வருதாந்திர வட்டியில்ல,  மாதாந்திர வட்டி
ஒவ்வொரு இ.எம்.ஐ.-யும் மாதாந்திர வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கடனின் மீதான வட்டி, அசலின் மீது ஒரு சதவீதமாகக் கணக்கிடப்படும். இந்தச் சதவீதத்தைத் தான் வட்டி விகிதம் என அழைக்கிறார்கள். 

பொதுவாக வட்டியை வருதாந்திர அடிப்படையில் தான் வங்கிகள் கணக்கிடும். உதாரணத்திற்கு, வருதாந்திர வட்டி 8% என்றால், ஒரு மாதத்திற்கான வட்டி கட்டணம் 0.66% ஆகும். இதைச் சுலபமாகக் கணக்கிடலாம். வருடாந்திர வட்டி விகிதத்தை (இதில் 8%) வருடத்தின் மொத்த மாதங்களால் (12) வகுத்துக் கொள்ள வேண்டும். மாதாந்திர வட்டி கிடைத்து விடும்.

கடன் அடைபடும் காலம் 
இ.எம்.ஐ. என்பது மாதாந்திர அடிப்படையில் கட்டப்படுவதாகும். அதனால் கணக்கிடுவதற்கு, மாதாந்திர அடிப்படையில் உங்களது கடன் அடைக்கப்படும் காலம் கருதப்படும். அதனால் வட்டியுடன் கடனை கட்ட வேண்டிய மாதங்களின் எண்ணிக்கை மிகவும் அவசியமாகும். 

உதாரணத்திற்கு, ஏழு வருட காலத்திற்குக் கடன் வாங்கப்பட்டிருந்தால், மொத்த மாதங்களின் எண்ணிக்கை 84 ஆகும்.

இ.எம்.ஐ.-களைக் கணக்கிடுதல்
அனைத்து அத்தியாவசியங்களும் தயாராகி விட்ட நிலையில், இப்போது இ.எம்.ஐ.-யை கணக்கிடும் நேரம் வந்து விட்டது. அதற்கு இரண்டு வழிகள் உள்ளது .

 ஒன்று எக்சல் ஷீட் பயன்படுத்துதல், மற்றொன்று சிக்கலான கணக்கைக் கொண்டது. எக்சல் வழியைச் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். எக்சல் கோப்பில், பி.எம்.டி. என்ற கருவியைப் பயன்படுத்தலாம்.

மைக்ரோசாப்ட் எக்சல்
எக்சல் மென்பொருளில் புதிய ஷீட் ஒன்றினை திறந்து, மெனுவில் உள்ள 'ஃபார்முலாஸ்' பிரிவுக்குச் செல்லவும். நிதி சார்ந்த ஃபார்முலாவான பி.எம்.டி.-யை தேர்ந்தெடுக்கவும். சில தகவல்களை உங்களை உள்ளீடு செய்யச் சொல்லும். மாதாந்திர வட்டி, 'என்.பி.ஈ.ஆர்' அல்லது கடனை கட்டப்போகும் மொத்த மாதங்களின் எண்ணிக்கை, மற்றும் அசல் தொகையைப் 'பி.வி.' பிரிவில் உள்ளீடு செய்யவும். பின் 'பேமென்ட் அட் தி எண்டு ஆஃப் தி பீரியட்' தேர்வைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவு தான்! கட்ட வேண்டிய மாதாந்திர இ.எம்.ஐ. தொகையை எக்சல் பிரயோகமே காண்பித்து விடும்.

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை 
வட்டி விகிதம் என்பது ஒரு சதவீதமே. அதனால் உள்ளீடு செய்யும் போது, எப்போதும் அதனை நூறால் வகுத்துக் கொள்ளுங்கள். 
உதாரணத்திற்கு, வட்டி விகிதம் 8% என்றால், எக்சல் பிரயோகத்தில் அதனை 8 என உள்ளீடு செய்வதற்குப் பதிலாக 0.08 என உள்ளீடு செய்ய வேண்டும். 

இரண்டாவதாக, கடனைக் கட்டும் போது, மாத கடைசியில் தான் கடனை கட்டுவீர்கள். அதனால் தான் நாம் 'பேமென்ட் அட் தி எண்டு ஆஃப் தி பீரியட்' தேர்வைத் தேர்ந்தெடுக்கிறோம். 

இது முக்கியமானவை; இல்லையென்றால் இ.எம்.ஐ. கணக்கீடு தவறாக நடந்து விடும்.

உதாரணம்
 நீங்கள் ஒரு கார் வாங்க வங்கியில் இருந்து 10 லட்ச ரூபாய்க்குக் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 

ஏழு வருட காலத்திற்கு வங்கி, வருடத்திற்கு 8% வட்டி வசூலிக்கிறது. 

அசல் தொகை 10,00,000/- ஆகும். 

மாதாந்திர வட்டி விகிதம் 0.66% ஆகும். 

மொத்த மாதங்களின் எண்ணிக்கை 84 ஆகும். 

அதனால் கடனுக்கான மாத தவணை தொகை ரூ.15,546.39 ஆகும்.

இ.எம்.ஐ. செயல்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் 
ஒவ்வொரு இ.எம்.ஐ. தொகையிலும் அசல் மற்றும் வட்டியின் ஒரு பங்கு இருக்கும். முதல் மாதத்தில், மாதாந்திர வட்டி விகிதமான 0.66% மற்றும் அசல் தொகையின் அடிப்படையில் வட்டி காட்டப்படும். இது ரூ.6,600/- ஆகும். 

அப்படிஎன்றால் இ.எம்.ஐ. தொகையான 15,546.39-ல் ரூ.8,946.39 அசலாகும். அதனால் நீங்கள் இன்னமும் ரூ.9,91,053.61-ஐ அசலாகக் கட்ட வேண்டும். 

இனி அடுத்த மாதத்திற்கு, இந்தத் தொகையின் மீது விகிதமாக வட்டி கணக்கிடப்படும். அதனால் இரண்டாவது மாதத்திற்கான வட்டி தொகை ரூ.6,540.95 ஆக இருக்கும். 

மீதமுள்ள இ.எம்.ஐ. தொகையான ரூ.9,005.44 தான் அசலுக்காகச் செலுத்த வேண்டிய தொகையாகும். இது நீங்கள் கட்ட வேண்டிய அசலை மேலும் குறைக்கும்.

தொடர்ந்து குறையும் 
இந்த முறையில், இ.எம்.ஐ.-யின் வட்டி தொகை ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே வரும். அதே நேரத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய அசல் தொகை குறைந்து கொண்டே வரும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ. அதே அளவில் தான் இருக்கும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 14.06.2016

Monday, June 13, 2016

என்ஜினியரிங் கவுன்சிலிங்கில்


என்ஜினியரிங் கவுன்சிலிங்கில் - என்ன செய்ய வெண்டும்?
   
பிளஸ் டூ தேர்வு முடிந்து அடுத்தக்கட்டத்திற்கு மாணவர்கள் தற்போது தங்களை தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். 

அந்த வகையில் பொறியியல் படிப்பில் எந்தப் பிரிவை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்யலாம்? கட் ஆஃப் மதிப்பெண்கள் என்றால் என்ன? ரேண்டம் எண் என்றால் என்ன? கவுன்சலிங் அறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் மாணவர்களுக்கு ஏற்படும்.

மாணவர்களின் சந்தேகங்களை அவர்களின் நிலையில் இருந்தே யோசித்து இந்தக் கட்டுரையை தொகுத்து தரப்பட்டுள்ளது.

கவுன்சலிங் எதற்காக நடத்தப்படுகிறது?
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

கட் ஆஃப் மதிப்பெண்கள் என்றால் என்ன?
இந்தக் கேள்வி மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் பதற்றம் இருக்கத்தான் செய்கிறது. கணிதம் பாடத்தில் பெற்ற மதிப்பெண்களை 200க்குப் பதிலாக 100க்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல இயற்பியலில் பெற்ற 200க்கான மதிப்பெண்ணை 50க்கு மாற்ற வேண்டும். இதேபோல வேதியியல் மதிப்பெண்ணையும் 50க்கு எடுத்துக்கொள்ளவேண்டும். 

இந்த மூன்று பாடங்களின் கூடுதலை மொத்தம் 200க்கு மாற்றிக்கொள்வதே கட் ஆஃப் மதிப்பெண்கள் எனப்படுகிறது. தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைகளுக்கு ஏற்றவாறு, ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணுக்கு ஏற்றபடி இடம் இருக்கின்ற கல்லூரியில், பிடித்த பாடத்தை தேர்வு செய்யும் முறையே கவுன்சிலிங் என்று அழைக்கப்படுகிறது.

கவுன்சலிங் எப்படி நடைபெறும்?
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை பொறுததவரை வெளிப்படையாக நடைபெறும். அது தொடர்பான விவரங்கள் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை வெப்சைட்டில் அப்டேட் செய்யப்படுகின்றன. 

கவுன்சலிங் செல்லும் முன் கவனிக்கவேண்டியவை 
கவுன்சிலிங் விண்ணப்பப் படிவம் அனுப்பும் முன், மாணவர் தான் எந்தத் துறையில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பெற்றோருடன் சேர்ந்து அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். 

இன்ஜினியரிங், விவசாயம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை திட்டமிட வேண்டும்.

மாணவருக்கு கலை மற்றும் அறிவில் நல்ல தேர்வு இல்லை என்று கூறிவிட முடியாது. அதேபோல் இன்ஜினியரிங் மட்டும் தான் சரியான தேர்வு என்றும் கூறிவிட முடியாது. 

மாணவருக்கு எதில் தகுதி இருக்கிறதோ அதை சரியாக அடையாளம் கண்டு, அத்துறையில் படிக்க வேண்டும். குடும்பத்துக்கும் மாணவருக்கும் ஏற்ற படிப்பு எது என்பதையும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.
இதற்கு ஏற்றாற்போல்தான் மாணவர் மருத்துவம் செல்ல வேண்டுமா, ஐ.டி.ஐ., செல்ல வேண்டுமா, டிப்ளமோ படிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். 

இன்ஜினியரிங் மட்டும்தான் கல்வி என்பது அல்ல. எந்த படிப்புப் படித்தாலும் அதிலிருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்களைப் பொறுத்தவரை எப்படியாவது கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் கஷ்டப்பட்டு இன்ஜினியர் ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நான்கு ஆண்டுகள் படிப்பை தொடர்வதில் சிக்கல் இருக்குமா என்பதைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை.

வங்கிக் கடன் கிடைக்குமா, அப்படிக் கிடைத்தால் எவ்வளவு சதவீதம் கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் துவக்கத்தில் சிந்திப்பதில்லை. மீதம் எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும். அதை கட்டி முடித்துவிட முடியுமா?

இதையெல்லாம் குடும்பத்தில் முதலில் யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யும் முன் இவற்றையெல்லாம் திட்டமிட வேண்டும். பள்ளிப் படிப்பு வரை பொதுவாக பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். 

அதுவே கல்லூரியில் சேர்ந்த பிறகு அந்தளவுக்கு அக்கறை செலுத்துவதில்லை. கல்லூரி, பாடப்பிரிவை தேர்வை செய்த பிறகும் தங்களது பிள்ளைகள் மீது நண்பர்களைப் போன்ற அணுகுமுறையுடன் கவனிக்க வேண்டும்.

கவுன்சலிங் போது சான்றிதழ்கள் வேண்டுமா?
கவுன்சிலிங் நாளில், ஒரிஜினல் சான்றிதழ்களை உடன் எடுத்துவர வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவற்றை திரும்ப எடுத்துச் சென்றுவிட வேண்டும்.

இன்ஜினியரிங் படிப்புக்கு தகுதி எது?
இன்றைய மாணவர்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கும் முதன்மையான படிப்புகளில் ஒன்றாக, பொறியியல் துறை கருதப்படுகிறது. தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட வேலை வாய்ப்புகளில், இன்ஜினியரிங் படிப்பு, விண்ணப்பதாரரின் தகுதியை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.

உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எதுவாக இருந்தாலும், அதற்கேற்ப இன்ஜின்களை வடிவமைப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருட்களை குறைவில்லாமல் உற்பத்தி செய்வது, நிறுவனத்தின் பொருளாதார தன்மைக்கேற்ப பொருட்களை அதிக செலவில்லாமல் தயாரித்துக் கொடுப்பது என பொறியியல் துறையை மேற்கொண்டவர்களின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பரிசோதனை கூடங்கள், இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை, அதற்கான உள்கட்டமைப்பு, கட்டடடம் என அனைத்திலும், தொழில் நுட்பங்களை கற்றுத்தேர்ந்த பொறியியல் துறையை சார்ந்தவர்களே பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும், திறமையான பொறியியல் வல்லுநர்களை, அதே பொருளை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனம், அதிக சம்பளம் சலுகைகள் கொடுத்து வேலையில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு, இத்துறையில் அதிக அளவில் நடக்கிறது.

எத்தனைப் பிரிவுகள் இதில் இருக்கின்றன?
ஏரோஸ்பேஸ், அக்ரி கல்ச்சுரல், ஆட்டோமொபைல், பயோகெமிக்கல், பயோமெடிக்கல், செராமிக், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், என்விரான்மென்டல் இண்டஸ்ட்ரியல், இன்ஸ்ட்ரூமென்டேசன், மரைன், மைனிங், மெக்கானிக்கல், மெட்டர்லஜிக்கல், பெட்ரோலியம், டெலிகம்யூனிகேஷன் டெக்ஸ்டைல் உட்பட பல்வேறு துறைகளில் பொறியியல் படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, ஏராளமான துணை படிப்புகளும் இதில் உள்ளன. பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடப் பிரிவுகளை படித்த மாணவர்கள் பொறியியல் துறையை தேர்வு செய்வதற்கு தகுதியானவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.

திறன்கள்: 
தான் சார்ந்திருக்கும் துறையில், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, கூர்ந்து கவனிக்கும் திறன், இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகளுக்கான காரணம் அறியும் திறன், எதையும் மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் ஞாபகசக்தி, மக்களின் தேவைக்கேற்ற கணிப்புகளை உணர்ந்து கொள்ளும் பொது அறிவு, எளிதான தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் கற்பனை, அதை உருவாக்கும் படைப்பாற்றல், மனதிற்குள் நினைப்பதை வரைபடமாக வரைந்து நிறுவன உரிமையாளரிடம் விளக்கமளிக்கும் செயலாற்றல் என பொறியியல் வல்லுநர்களின் அடிப்படை தகுதிகள், ஒவ்வொரு துறைக்கேற்ப கூடுதல் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ரேண்டம் எண் மற்றும் ரேங்கிங் என்றால் என்ன?
கவுன்சிலில் போது ரேண்டம் எண், ரேங்கிங் ஆகியவை முக்கியமானவை. கவுன்சிலிங் துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ரேண்டம் எண், 10 நாட்களுக்கு முன் ரேங்கிங் வழங்கப்படும். 

ரேண்டம் எண்ணுக்கு முக்கியமான பணி இருக்கிறது. பொதுவாக, ரேங்க் பட்டியல் தயாரிக்கும் போது குறிப்பிட்ட இடத்துக்கு பலர் மோதும் நிலை ஏற்படும். அப்போது ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ரேண்டம் எண் உதவும். இது, வழங்கப்பட்ட பின்தான் ரேங்கிங் அறிவிக்கப்படுகிறது.

ரேங்கிங்கில், சிலருக்கு ஒரே ‘கட்-ஆப்’ மதிப்பெண் இருக்கும். இந்நிலையில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு ரேங்க் முன்னுரிமை கொடுக்கப்படும். அடுத்து இயற்பியலில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

இதற்கடுத்து, பிறந்த நாள் அடிப்படையில், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில்தான் ரேண்டம் எண்ணில் யாருக்குப் பெரிய எண் என்று பார்க்கப்படும். அதன் அடிப்படையில் ரேங்க் வழங்கப்படும். ரேங்கிங் நிர்ணயித்த பின்னர், அது அண்ணா பல்கலைக்கழக வெப்சைட்டில் வெளியிடப்படும். ஒரு மாதம் வரை கவுன்சிலிங் நடக்கும்.

 ஜாதிச் சான்றிதழை இணைக்க மறந்திருந்தால்?
ஜாதி சான்றிதழை இணைக்கத் தவறியோர், பொதுப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பர். உரிய சான்றிதழை சமர்ப்பித்த பின், கம்யூனிட்டி ரேங்கிங்கில் சேர்க்கப்படுவர். அப்போது, ரேங்க் எண்களில் இரு முழு எண்களுக்கு இடையில் 0.25, 050 அல்லது 0.75 என சேர்க்கப்படும். இதனால் மற்ற மாணவர்களின் ரேங்கிங் மாறாது. உதாரணமாக 13268.50 என்று வழங்கப்படும். மற்ற மாணவர்களுக்கு முழு எண்ணாக ரேங்கிங் இருக்கும்.
ரேங்கிங் அறிவிப்பி பின், கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.

 இந்த ஆண்டு (2016) எப்போது நடைபெறவிருக்கிறது?
ஜூன் 24 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேங்கிங் வரிசைப்படி எந்தெந்த நாட்களில் கவுன்சிலிங் என்பது பத்திரிகைகளில் வெளியாகும். அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் கூட, அந்நாளில் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். 

கவுன்சிலிங் நடந்து கொண்டிருக்கும் போதே, வெப்சைட்டில் விபரங்களை அறியலாம். கவுன்சிலிங்குக்கு முந்தைய நான் இட விபரங்களை அறிந்து கொள்வது நல்லது. இன்டர்நெட்டிலும், கவுன்சிலிங் செல்லும் முன்பாக உள்ள விளக்கவுரை அரங்கிலும் மாணவர்கள் இட நிலவரங்களை தெளிவாக அறியலாம்.

 எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
மாணவருடன் வருபவர், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, உடனடி முடிவு எடுப்பவராக இருக்க வேண்டும். கவுன்சிலிங் துவங்குவதற்கு 1.30 மணி நேரத்திற்கு முன் மாணவர் அங்கு இருக்க வேண்டும். ஒருவேளை, ரேங்கில், மறுமதிப்பீடு தொடர்பாக விபரங்களை அப்டேட் செய்ய விரும்புவோர், 3 மணி நேரத்துக்கு முன் வரவேண்டும்.

கவுன்சிலிங் வருவோர், 5 ஆயிரம் ரூபாய்க்கான அட்வான்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.  எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும். கவுன்சிலிங் வளாகத்திலேயே அதை செலுத்தலாம். 

அப்போது மாணவர் தொடர்பான விபரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். விளக்க உரை நடக்கும் ஹாலுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். அங்கு மாணவர் வந்ததற்கான வருகை பதிவு செய்யப்படும். 

பின், கவுன்சிலிங் ஹால் செல்வதற்காக விளக்கவுரை ஹாலில் அமர வேண்டும். அங்கு கவுன்சிலிங் நடைமுறைகள் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்கவுரை ஹாலில் தெரிந்து கொள்ளலாம்

பின்னர், கவுன்சிலிங் அறைக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். அங்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ்களில் ஏதாவது விடுபட்டு போயிருந்தால், வேறு சிக்கல்கள் இருந்தால் தங்களைப் பற்றி முழுத் தகவல்களை அப்டேஷன் பிரிவில் பதிவு செய்யலாம்.

 பின் கவுன்சிலிங் நடைபெறும் பகுதிக்கு  மாணவர்கள் அழைக்கப்படுவர். இங்கு கல்லூரியை தேர்வு செய்யும் போது, ஒரே மாதிரியான பெயர்களில் பல கல்லூரிகளில் இருக்கும். 

ஒரு முறை கல்லூரியை தேர்வு செய்து முடித்து விட்டால், மாணவர் அடுத்த கல்லூரியை தேர்வு செய்ய முடியாது. ஆகவே, கல்லூரியின் ‘கோட்’ எண்ணை கவனமாக தெரிந்து வர வேண்டும். அது விளக்கக் குறிப்பில் உள்ளது.

ரேங்க் அடிப்படையில் தனது முறை வந்தவுடன், தேர்வு செய்த கல்லூரி, பாடப்பிரிவை உறுதி செய்ய வேண்டும். உங்களது முடிவுப்படி ஒரு முறை கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு விட்டால் மாற்ற முடியாது என்பதால் அந்நேரத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.

இடத்தை தேர்வு செய்தவர்கள், அதற்கான ஒதுக்கீட்டு சான்றிதழை (அலாட்மென்ட் லெட்டரை) பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பலாம்.

யாருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்?
முன்னாள் ராணுவத்தினர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு  இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை தரப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட பிரிவுக்கும் தனித்தனி விண்ணப்பம் இருக்கும். இதை பூர்த்தி செய்து இணைக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகங்களில் 4 இடங்கள்,  அண்ணா தொழில்நுட்ப  பல்கலைக்கழங்களில் 4 இடங்கள், அரசு, உதவிபெறும் கல்லூரிகளில் 34 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 108 இடங்கள் என150 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

சுதந்திர போராட்ட தியாகி களின் வாரிசுகளுக்கு அரசு, உதவி பெறும் பல்கலைக்கழ கங்களில் 10 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தகுதியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 12, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 100 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு
விளையாட்டு, வீரர்களுக்கான இட ஒதுக் கீட்டின்கீழ்  விண்ணப்பிப்பவர் கள் உரிய ஆவனங்களுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வந்து படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

ஒற்றைச் சாளர முறையில் இடம்பெறும் மொத்த இடங்களில் காதுகேளாதோர்,  கண் பார்வையற்றோர், பிற உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தலா ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

விண்ணப்பத்துடன் இருக்க வேண்டியவை
குறிப்பிட்ட பிரிவில் இட ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பிப்போர்,  அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் பொதுப் பிரிவினாக கருதப்படுபவர். இதனால் அவர்கள் குறிப்பிட்ட பிரிவுக்கு உரிய இட ஒதுக்கீட்டை கோர முடியாது. மாணவர், கவுன்சிலிங் நடைபெறும் காலத்துக்குள் சிறப்பு விண்ணப்பத்தை இணைத்துக் கொள்ளலாம். 

ஜாதிச்சான்றிதழ் கொடுக்க தாதமானால். நல்ல கல்லூரியை தேர்வு செய்ய முடியாமல் போய் விடும். விண்ணப்ப விஷயத்தில் முழு கவனம் செலுத்தினால் தவறுகளை தவிர்க்கலாம் 8ல் இருந்து  12ம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்தவர்களே தமிழக மாணவர்களாகக் கருதப்படுபவர். 

விண்ணப்பத்தில் அதற்கான விபரங்களை குறிப்பிட்ட வேண்டும். இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இது தெரிந்து மாணவர் இருப்பிட சான்றிதழை வழங்கினால் அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.

மரைன், மைனிங் படிப்பு: தகுதி என்ன?
பொதுவாக இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழியாக சேர்க்கை பெற வயது தடையில்லை என்றாலும், மரைன் படிப்பில் சேர மட்டும் அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பிரிவினரும் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

மைனிங் படிப்பை பொறுத்தவரை, ஆண்கள் மட்டுமே சேர முடியும். இதைதவிர, உடல் தகுதியும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறந்த துறையை எப்படி தேர்வு செய்வது?
துறையை தேர்வு  செய்யும் முன், அதை எவ்வாறு தேர்வு  செய்ய வேண்டும் என்ற அறிவை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். பிடித்தமான துறையாக இருந்தாலும், அதன் வளர்ச்சி விகிதம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, படிப்பை தேர்வு செய்யுங்கள். 

எந்த தொழில்நுட்பம் தற்போது சிறப்பாக உள்ளது; வேலை வாய்ப்பு எந்த  துறைக்கு நன்றாக இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.  இதையடுத்து, ஐந்து ஆண்டுக்கு பின் உள்ள நிலைமையை, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

படித்த பின், மாணவர் வேலைக்குப் போகப்போகிறாரா, ஆராய்ச்சி செய்யப் போகிறாரா அல்லது ஆசிரியர் பணிக்கு வரப்போகிறாரா என் பதை அறிந்து முடிவு செய்ய வேண்டும். தொழிற்சாலை பணிக்குச் செல்ல வேண்டுமானால், அதற்கேற்ப படிப்பு அமைய வேண்டும்.
அது தொடர்பாக மாணவருக்கு விழிப்புணர்வு இருக்கிறதா என பார்க்க வேண்டும். 

ஆராய்ச்சியில் விருப்பம் இருந்தால், ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளை தேர்வு செய்யலாம். மாணவர்கள், பெற்றோருடன் கலந்து ஆலோசனை செய்யலாம்.

இயற்பியலில் ஈடுபாடு உள்ளவர்கள், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பாடங்களை தேர்வு செய்யலாம். வேதியியலில் ஆர்வம் இருந்தால், மெட்டீரியல் சயின்ஸ் தொடர்பான பாடங்களை எடுக்கலாம். இதையெல்லாம் நன்றாக யோசித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்
.
கவுன்சிலிங்  அறைக்கு வந்த பின், கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணம் இருக்குமே தவிர, இது போன்ற விஷயங்களை பரிசீலிக்க நேரம் இருக்காது.
பக்கத்து வீட்டுக்காரர் தேர்வு செய்தார். அதே போல் நான் இந்த பிரிவை தேர்வு செய்யப் போகிறேன் என்ற மனப்பாங்கில் தேர்வு செய்யக் கூடாது. மாணவரால் படிக்க முடியுமா: அவருக்கு அந்த திறன் இருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.
பெற்றோர் சிலர், தாங்கள் விரும்புவதைத்தான் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். அது தவறு. மாணவரே முடிவு செய்யட்டும் என விட்டுவிட வேண்டும். அல்லது பெற்றோர் இணைந்து முடிவு செய்ய வேண்டும்.

சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி
கவுன்சிலிங்கில் மாணவர்கள் எடுத்த ‘கட்-ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் தான் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். எனவே பிளஸ் 2 மதிப்பெண் வந்தவுடன், எந்த கல்லூரியில் எந்த பிரிவை எடுக்கலாம். என்பதை, கடந்த ஆண்டு, இதே கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடத்தை வைத்து முடிவு செய்யலாம். 

ஆனால், இது உத்தேசமானதுதான். சில நேரங்களில் கடந்த ஆண்டு அதே மதிப்பெண்ணுக்கு கிடைத்த அதே மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடம் இப்போது கிடைக்காமல் போகலாம். கிடைக்கவும் செய்யலாம்.

180 ‘கட்-ஆப்’ எடுத்த மாணவர் அண்ணா பல்கலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கக் கூடாது. அதே சமயத்தில் புதிய கல்லூரியில்தான் கிடைக்கும் என்பதில்லை. கடந்த முறை மாணவர்கள் பாடப்பிரிவுகளையும் கல்லூரிகளையும் தேர்வு செய்தது போல் இந்த ஆண்டும் இருக்க  வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது பெரிய அளவில் மாற்றம் இல்லை.

மதிப்பெண் வந்துவிட்டதால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து, 10-15 கல்லூரிகளை தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 180 ‘கட்-ஆப்’ எடுத்த மாணவர் 177 முதல் 183 வரை ‘கட்-ஆப்’ வரை கிடைத்த கல்லூரியிலிருந்து தேர்வு செய்து கொள்வது நல்லது.

ஒவ்வொருவர் பார்வையிலும் கல்லூரியைப் பற்றிய மதிப்பீடு மாறுபடும். சில பெற்றோர்கள் கல்லூரியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால்தான் படிப்பார்கள். சில மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் படிப்பார்கள் என்று நினைப்பார்கள். அதைப் பொறுத்துதான் அவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். வீட்டிலிருந்து சென்று படிக்க வேண்டுமா விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

நான்கு ஆண்டுகள் அந்த கல்லூரியில்தான் இருக்க வேண்டும் என்பதால், இதையெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதையெல்லாம் அந்தந்த கல்லூரியில் படித்த மாணவர்களிடம் கேட்கலாம். இதையெல்லாம் விட முக்கியமாக வேலைவாய்ப்பு எப்படி உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி என்ற விபரங்களையும் சேகரிக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லூரியைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்களின் திறனும் மிக முக்கியம். ஆய்வக வசிதி எப்படி, பயிற்சி அளிக்கும் முறைகள் திருப்திதானா என்பதையும் பார்க்க வேண்டும். பாடம் தவிர்த்த பிற திறன் வளர்த்திலில் கல்லூரியின் செயல்பாடு ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். பாடம் தவிர்த்த பிற திறன் வளர்த்தலில் கல்லூரியின் செயல்பாடு ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்.

கல்லூரியில் சேர்வதற்கு முன், அந்த கல்லூரியை பெற்றோருடன் சென்று பார்க்க வேண்டும். அங்குள்ள மாணவர்களைப் பார்த்தும் கல்லூரியில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அட்மிஷனுக்காக கல்லூரிக்கு செல்வதைவிட, விழிப்புணர்வு பெறுவதற்காகக் கல்லூரிக்கு செல்லலாம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் தேர்வு செய்த 15 கல்லூரிகளில் 10 கல்லூரியை இறுதி செய்து விடுவோம்.

கவுன்சிலிங்கின் போது, அந்த கல்லூரிகளுக்குள், காலியாக உள்ள இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து தேர்வு செய்வது எளிதாக இருக்கும். சிலர் நல்ல கல்லூரியில் எந்த பிரிவு கிடைத்தாலும் படிக்கிறார்கள். சிலர் நல்ல பிரிவு எந்த கல்லூரியில் கிடைத்தாலும் படிக்கிறார்கள். இந்த இரண்டுமே சரியான முடிவுதான். அது அவர்களது விருப்பம்.

அப்படி அவர்கள் படித்து முடித்தால் கூட, கண்டிப்பாக அவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். பெற்றோர்களிடம் அனுபவமும் மாணவர்களிடம் புத்தி சாலித்தனமும் இருக்கிறது. முடிவு இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும்.
யாருடைய கையிலும் இல்லை என்பதை புரிந்து  கொள்ள வேண்டும். மாணவர்  பிடிவாதமாக இருந்தால் பெற்றோர்கள் மாணவர் சிந்திக்க அவகாசம் கொடுக்கலாம். இரு தரப்பிலும் மாற வேண்டியிருந்தால் மாறித்தான் ஆக வேண்டும். இரு தரப்பினரும் முடிவு எடுத்து விட்டால், பின்னர், இப்படி முடிவு செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே என்று நினைக்கக்கூடாது. முடிவு எடுத்தபின் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

போலிச் சான்றிதழ்களா? உஷார்!
தற்போது இன்ஜினியரிங் படிப்பின் மீது மாணவர்கள் அதிக  ஆர்வம் காட்டுகின்றனர். இச்சூழ்நிலையில், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் முன்னணி கல்லூரிகளில் இடம் பெறவும், அரசு சலுகைகளை பயன்பபடுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பிள்ளைகளுக்கு புத்தி சொல்ல வேண்டிய பெற்றோரை அதிக அளவில் இதில் ஈடுபடுவது தான். பொதுவாக, விண்ணப்பப் படித்துடன் இணைக்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் உண்மை  தன்மை தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
1. போலி சான்றிதழ் பயன் படுத்தி, பொறியியல் கவுன்சிலிங் மூலமாக சேர்க்கை பெற்றிருந்தால் அத்தகைய மாணவ, மாணவியரது படிப்பு காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இடைநீக்கம் செய்யப்படுபவர்.

2. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்படுவர்.

3. மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பெற்றோர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உண்மையான சான்றிதழ்களை மட்டுமே பயன்படுத்தி, நேர்மையான முறையில் சேர்க்கை பெற்று படியுங்கள்.

சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்:
உலகம் முழுவதும் அதிகமான மாணவர்கள், பொறியியல் படிப்பையே விரும்பி தேர்வு செய்கின்றனர். நாட்டின் சுற்றுச்சூழல், தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் இன்ஜினியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. விரும்பிய துறைகள் சாதிக்க நினைக்கும் மாணவர்கள், அதில் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

விருப்பம்தான் முதல் படி..
பொறியியல் படிப்புக்கான விதை, உயர்நிலைப் பள்ளியிலேயே போடப்படுகிறது. பள்ளி காலங்களிலேயே மாணவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து, அதில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், அல்ஜீப்ரா, வடிவியல், கோணவியல் மற்றும் நுண்கணிதம் ஆகியவற்றை விரும்பி படிக்க வேண்டும்.

எப்படி தேர்வு செய்யலாம்?
விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம். இருப்பினும் அந்த துறையில் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார சூழ்நிலை மற்றும் இதர காரணிகள் எவ்வாறு உள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
பயில விரும்பும் கல்லூரிக்கு சென்று, சீனியர் மாணவர்களிடம் கலந்துரையாடினால் தெளிவு பிறக்கும். தொழிற்சாலைகளுக்கு சென்று எந்த வகையான இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள் என கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சிறப்பாக படித்து, தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டால் வீட்டையும், நாட்டையும் உயர்த்தலாம். எந்த இன்ஜினியரிங் துறையை தேர்வு öய்தாலும் பணி வாயப்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சி, உற்பத்தி பிரிவு என பிடித்தமான பிரிவில் பணிபுரியலாம்.

சுயசார்பு படிப்புகள்...
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இணைப்பு பெற்று, அரசு உதவியின்றி தனியாரால் நடத்தப்படும் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்பு சுயசார்பு படிப்பு என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், அரசு கல்லூரியோ அல்லது அரசு உதவிபெறும் கல்லூரியோ அரசு உதவியின்றி ஒரு குறிப்பிட்ட துறையை சுயமாக நிர்வகித்து நடத்தும் பாடங்கள் சுயசார்பு பாடங்கள் (எஸ்.எஸ்..,) என்று அழைக்கப்படுகின்றன. 

எவ்வளவு கட்டணம்?
கவுன்சிலிங் வழியாக இடம் கிடைக்கும் மாணவர் சுயநிதி கல்லூரியில் சேர்ந்தால்கட்டணம் குறைவு. தர அங்கீகாரம் பெற்றுள்ள துறையிலும் சுயசார்பு துறையில் படிப்புக்கு சேர்ந்தால் அதைவிட அதிகமான பணம் கட்ட வேண்டும். நிர்வாக ஒதுக்கீடு வழியாக இடம்பெறும். மாணவர்கள் ஏறத்தாழ இரு மடங்குகட்டணம் அதிகமாக கட்ட வேண்டும்.

நன்றி : http://www.sikams.com/

Saturday, June 11, 2016

உங்கள் குழந்தையுடன் வெளிநாட்டுக்கு பயணமா?


உங்கள் குழந்தையுடன் வெளிநாட்டுக்கு பயணமா?
என்ன செய்ய வேண்டும்?
வெளிநாடுகளுக்கு கைக்குழந்தையுடன் பயணம் மேற்கொள்ளப்போகும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால் நிச்சயம் இங்கிருக்கும் டிப்ஸ்களை படித்துவிடுங்கள் என்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த பிருந்தா. பலமுறை வெளிநாட்டு பயணம் தந்த அவருடைய அனுபவத்தில் இருந்து குறிப்புகள் சில…

1. தட்பவெட்பம்

நீங்கள் பயணம் மேற்கொள்ளப் போகும் நாட்டை பற்றி வெப்சைட்டில் நன்கு தேடி, படித்துப் பாருங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு அங்குள்ள தட்பவெட்பத்தை சமாளிக்க என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், கூடாது என்று கணிக்க முடியும்.

2. பாஸ்போர்ட்

குழந்தை பிறந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்திருந்தால், அவர்களுக்கு ஐந்து வயது பிறப்பதற்கு முன்னர் பாஸ்போர்ட்டை புதுப்பித்து விடுங்கள். விசா அப்ளை செய்யும் முன், குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னர் வெளிநாடு செல்லும் அனைவரின் பாஸ்போர்ட்டையும், அதன் புதுப்பிக்கும் தேதியையும் பார்த்து விடுவது நல்லது.

3. விசா (Visa)

விசா என்பது ஒரு நாட்டிற்கு செல்ல நமக்கு கொடுக்கப்படும் அனுமதிச் சீட்டு. அதை முறையாக பாஸ்போர்ட்டுடன் அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் முன்னர் ஜெனரல் அல்லது ஆன் தி அரைவல் விசா வாங்கிச் செல்ல வேண்டும். தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு செல்லும்போது விமான டிக்கெட், பாஸ்போர்ட் இருந்தால் போதுமானது. அங்கே சென்று இறங்கியவுடன் நம் பாஸ்போர்ட்டை காண்பித்து பணம் கொடுத்து விசா வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த முறை எல்லா நாடுகளுக்கும் பொருந்தாது. எனவே பயணம் மேற்கொள்ளும் முன்னர் அந்த நாட்டு விசா முறையை பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். விசா கிடைப்பதற்கு குறைந்தது 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.


4. ஃப்ளைட் டிக்கெட் (Flight Ticket)

விமானத்தில் பயணிக்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிக்கெட் வாங்கியாக வேண்டும். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் விலையில் பத்து சதவிகிதத்தை நாம் டிக்கெட்டாக கட்டணமாக செலுத்த வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட்டுக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். டிக்கெட் எடுக்கும் போது பயணக் காப்பீடு (இன்சூரன்ஸ்) அவசியம் எடுத்துக் கொள்வது நல்லது. கைக்குழந்தையுடன் பயணம் மேற்கொள்கிறவர்கள் டிக்கெட் புக் செய்யும்போது, குழந்தையை படுக்க வைக்கும் வசதி கொண்ட இருக்கையாக பார்த்து புக் செய்யவும். பொதுவாக இது போன்ற இருக்கைகள் 2 அல்லது 3 மட்டுமே ஒரு ஃப்ளைட்டில் இருக்கும். எனவே முதலில் முந்துபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.

5. மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையுடன் பயணம் மேற்கொள்ளும்போது தாய்க்கு சிரமம் இருக்கதான் செய்யும். அதைத் தடுக்க முறையான திட்டமிடல் அவசியம். உங்கள் குழந்தையை கவனித்த டாக்டரிடம் இருந்து குழந்தைக்கு தேவையான மருந்து எழுதிய பிரிஸ்கிரிப்ஷன், தடுப்பூசி போட்டதற்கு ஆதாரமான அட்டை, அவர்கள் பிறந்தபோது கொடுத்த மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத்தில் பயணிக்கலாம். சில நாடுகளில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தையோடு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் டாக்டரிடம் சொல்லி, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைகளுக்கும் போட்டு விடுங்கள். இல்லையென்றால் நாம் சென்று இறங்கியதும், நம்மை தனிமைப்படுத்தி ஆயிரம் கேள்விகள் கேட்டு, ஒருவழியாக்கி விடுவார்கள். தடுப்பூசிபோட்டதற்கான நகல் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

6. முதல் உதவிப்பெட்டி

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முதல் உதவிப் பெட்டி, காய்ச்சல், ஜலதோஷ மருந்து, சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்து போன்றவற்றை உரிய மருந்து சீட்டுடன் வைத்துக் கொள்வது நலம்.

7. ஸ்நாக்ஸ்

பயண செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப அந்த நாட்டு பணத்தை மாற்றி வைத்துக் கொள்வது நலம். குழந்தையுடன் செல்லும்போது பலவித அடுக்குகளைக் கொண்ட ஷோல்டர் பையை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள். அதில் டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பாட்டில், பால், பால் பவுடர், தண்ணீர், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஒரு செட் அவசியம் இருக்கட்டும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று உங்கள் குழந்தையை சமாளிக்கும் உணவு பொருட்களை அவசியம் வைத்துக் கொள்ளுங்கள். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை பல முறை நன்கு படித்துவிடுவது நல்லது.

8. விமானத்தில் உதவி

விமானத்தில், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுடுதண்ணீர் தருவது, அழுது கொண்டே இருக்கும் குழந்தையை நடந்து கொண்டே தட்டிக் கொடுக்க நம்மை அனுமதிப்பது, குழந்தை வாந்தியெடுத்தால் அதை வந்து க்ளீன் செய்து விடுவது போன்ற உதவிகள் செய்வார்கள். எனவே கவலை வேண்டாம்.

9. அவசிய தேவைகள்

குழந்தைகளுக்கான பொருட்களை அதிக அளவில் எடுத்துச் சென்று உங்கள் சுமையை அதிகரிக்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்றவறை எல்லா நாட்டிலும் தாராளமாக கிடைக்கிறது. குளிர் பிரதேசங்களுக்கு செல்லும் போது ஷூ, சாக்ஸ், ஜெர்கின் அல்லது ஓவர் கோட், டிரஸ், சன்ஸ்க்ரீன் லோஷன், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு என்று அனைத்தும் இருக்கட்டும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச்சென்று இருந்தால், கூட்டத்தில் எளிதில் உங்கள் குழந்தையை அடையாளம் கண்டு கொள்ளலாம். அதிக கனமான ஆடைகளை தவிர்க்கவும்.

10.  தங்கும் விடுதிகள் (Hotels)

நீங்கள் சுற்றி பார்க்கும் இடத்துக்கும் உங்கள் தங்கும் விடுதிக்கும் அதிக தூரம் இருக்க வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் மறுபடியும் தங்கும் விடுதிக்கு வர அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத அளவுக்கு விடுதிகளை தேர்ந்தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு அசதியை தரும்.

11. கைடு புத்தகம் கட்டாயம்

சுற்றுலா செல்லும் பட்சத்தில், பல இடங்களை தேர்வு செய்து குழந்தைகளை சோர்வாக்கிவிடாமல், அவர்களுக்கு செளகரியமான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள். அதற்கு முன் அந்த நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்பர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.

12. உணவில் கவனம்

உணவுகளை பொறுத்தவரை நாம் விரும்பும் உணவு வெளிநாட்டில் கிடைக்காமல் போகலாம். எனவே பிரெட் போன்ற அதிகம் தொல்லை தராத உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் பிரச்னைகள் வராது.

நன்றி : விகடன் செய்திகள் - 06.06.2016

வாழை இலைக் குளியல்


வாழை இலைக் குளியல் - என்ன செய்ய வேண்டும்?
கசகசன்னு… வியர்வையே பிடிக்காது… என்பவரா நீங்கள்? 

வியர்வை அசௌகரியம் அளிப்பது அல்ல… அது நம் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு.  வியர்வை வரும்போது, சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு வியர்வையை வெளியேற்றுகிறோமோ, அந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆரோக்கியம் பெருகும். 

எப்போதும் ஏ.சி அறையில் இருப்பதால், பலருக்கும் வியர்ப்பதே இல்லை. இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் தங்கிவிடுகிறது. இதுவே, பல நோய்களுக்கு வழிவகுத்துவிடுகிறது. மேற்கத்திய நாடுகளில் அதிகக் குளிர் என்பதால், வியர்வை வெளியேறுவது குறைவாக இருக்கும். இதனால், அவர்கள் சோனாபாத், ஸ்டீம்பாத் எனப் பல வகையான ஸ்பாக்களுக்கு (குளியல்கள்) செல்வார்கள்.

நம் ஊரில் அதற்கு இணையாக, இயற்கை ஸ்பாக்கள் உள்ளன. அதில் ஒன்று வாழை இலைக் குளியல். வாழை இலையில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள பாலிபீனால் மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும், சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. கார்பன்டை ஆக்ஸைடை ஈர்த்து, ஆக்சிஜனை வெளியிடும் அளவு வாழையில் அதிகம். அதனால், உடலில் உள்ள கெட்ட வாயு, கழிவுகளை வெளியேற்றுகிறது. சருமத்துக்கு நண்பனாக இருந்து, புண்களை ஆற்றுகிறது என்பதால், வாழை இலைக் குளியல் மிகவும் சிறந்தது.

யாருக்கு வாழை இலைக் குளியல்?

இயற்கையான முறையில் உடலில் இருந்து கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றுவதே வாழை இலைக் குளியல். 18 – 80 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் குளியலை எடுக்கலாம். ஆஸ்துமா நோயாளிகள், பெண்கள் மாதவிலக்கு சமயம் இதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இந்தக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

வாழை இலைக் குளியலுக்குத் தயாராகும் முன், போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது, உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை சுரக்க உதவும்.

காலை 12 மணிக்கு முன் இந்தக் குளியலை எடுத்துவிட வேண்டும்.

வீட்டில் செய்வதைத் தவிர்த்து, மருத்துவர் உதவியுடன் செய்வது நல்லது.

மாதம் ஒருமுறை வாழை இலைக் குளியல் செய்துகொள்ளலாம். மிகச் சிறந்த நச்சுநீக்க சிகிச்சையாகச் செயல்படும்.

எப்படிச் செய்வது?

சிகிச்சைக்கு வருபவர், வெயிலில், குறைந்த ஆடைகளுடன் வாழை இலை மீது படுக்கவைக்கப்படுவார். அவர் மீது வாழை இலைகளால் மூடிவிடுவர். சுவாசிக்க மூக்குப் பகுதியில் சிறு துளையிடப்படும். உடல் முழுவதும் இலையால் போர்த்தி, வாழை நாரால் கட்டிவிடுவர். இந்த நிலையில் வெயிலில் 20-25 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் இலைகளில் படும்போதுதான், அது நம் உடலிலும் பட்டு கழிவுகளை வெளியேற்றும்.

 பலன்கள்

வாழை இலைகள் மேல் சூரியக் கதிர்கள் பட, நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும்.

உடல் எடை குறைப்பதற்கு, இந்தக் குளியல் உதவும்.

ரூமாடாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid arthritis) உள்ளவர்களுக்கு, எப்போதும் வலி இருக்கும். அவர்களின் வலி குறைய இந்தக் குளியல் உதவும்.

சொரியாசிஸ், படை, சொறி, அரிப்பு, சரும வறட்சி போன்ற பல்வேறு சரும நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையாக இருக்கும்.

உடல்பருமன் மற்றும் அதனுடன் வேறு பிரச்னைகளும் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் வாரத்துக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

கெட்ட கொழுப்பு, தேங்கிய கழிவுகள் வெளியேறும். மூட்டு வலி, உடல் வலி நீங்கும்.

இதய நோயாளிகள் இந்தக் குளியலை எடுக்கலாம். மயக்கம் வருவது போல இருந்தால், அதற்கு பயப்படத் தேவை இல்லை. வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் வெளிப்பாடுதான் இது. மருத்துவர் உதவியுடன் இதய நோயாளிகளும் குளியலை எடுப்பது நல்லது.

கை, கால்களில் வீக்கம் இருப்பவர்கள் இவற்றைச் செய்துவர வீக்கம் குறையும்.

உடலுக்குப் புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும்.

நன்றி :  டாக்டர்விகடன் - 16.06.2016