காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை, வக்கீல் செலவு ரூ.40 கோடி
ஒரே நபருக்கு ஆறரை கோடி ரூபாய் 'பீஸ்'
கோவை:காவிரி நதிநீர் பங்கீடு
மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்னை தொடர்பாக, வழக்குகளை நடத்துவதற்கு, வக்கீல்களுக்கான கட்டணமாக, தமிழக அரசு, 40 கோடி ரூபாய்
செலவு செய்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்
தெரிய வந்துள்ளது.
'காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக
கர்நாடகா வுடனும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக
கேரளாவுடனும், தமிழகத்துக்கு நீண்ட காலமாக, சட்டப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த 1990ல், காவிரி நடுவர் மன்றம்
அமைத்ததிலிருந்து, சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதி
நீர் பங்கீடு தொடர்பான வழக்கு, பல்வேறு
திருப்பங்களைச் சந்தித்துள்ளது.
வாதிட்டது இவர்களே
தமிழக அரசின் உரிமைகளை எடுத்து
சொல்லி, முக்கிய தீர்ப்புகளை வாங்கியது யார், அரசித ழில் வெளியிட வைத்தது யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே, இன்றளவும் மோதல் நீடிக்கிறது. ஆனால், உரிய ஆதாரங் களை எடுத்து வைத்து, இந்த தீர்ப்புகளைப் பெற்றதில், தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல்களுக்கே பெரும் பங்குண்டு.
இருப்பினும், இவர்களை நியமிப்பதில், மாநில நலனைத் தாண்டி, அரசியல் தலையீடு இருப்ப தும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த வக்கீல்களுக்கு, அரசு சார்பில், பெரும் தொகை
கட்டணமாக தரப்படுகிறது. இதனால், அரசு தரப்பில்
வக்கீலாக வாதிடப்போவது யார் என்பதை முடிவு செய்வதில், ஆளும் கட்சியின் தலையீடுகள் இருந்தன.
கடந்த, 1991லிருந்து, காவிரி நதி நீர் மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக, சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான தமிழக வக்கீல்கள் யார் யார், அவர்களுக்கு தரப்பட்ட கட்டணம் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரங்களை வாங்கியுள்ளார், கோவையைச் சேர்ந்த வக்கீல் லோகநாதன்.
இதில் கிடைத்துள்ள தகவல்களின் படி, கடந்த, 1991லிருந்து, 2016 வரை, காவிரி நதி நீதி பிரச்னை தொடர்பாக, தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட் டில் 32 வக்கீல்கள் ஆஜராகியுள்ளனர். இவர்களில் 14 பேர், 1999லிருந்து முல்லைப்
பெரியாறு பிரச்னைக் காகவும், ஆஜராகி வாதாடி உள்ளனர்.
பிரச்னை முடியவில்லை
காவிரி பிரச்னைக்காக வாதாடிய, 33 பேரில், ஜி.உமா பதி என்பவர் மட்டுமே, 1991லிருந்து இதுவரை, தொடர்ச்சியாக
இவ்வழக்கில் ஆஜராகி வருகிறார். மற்ற அனைவருமே, ஆட்சி மாறியபோதெல்லாம் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆண்டுகளில், காவிரி நதிநீர் பிரச்னைக் காக
வாதாடிய, 33 வக்கீல்களுக்கும்
கட்டணமாக, 30 கோடியே 93 லட்சத்து, 80 ஆயிரத்து, 643 ரூபாய், தமிழக அரசு செலுத்தியுள்ளது.
அதேபோன்று, 1999 லிருந்து
முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக வாதாடிய, 15 வக்கீல்களுக்கு, 9 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 38 ரூபாய், கட்டணமாக வழங்கப்பட்டு உள்ளது.
இவர்களில்,வக்கீல் உமாபதிக்கு மட்டும்,4 கோடியே, 67 லட்சத்து, 37 ஆயிரத்து, 302 ரூபாய், கட்டணமாகத் தரப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னைக் காக இவர்
ஆஜரானதற்காக, ஒரு கோடியே, 77 லட்சத்து, 89 ஆயிரத்து, 42 ரூபாய் வழங்கப்பட்ட தையும் சேர்த்தால், இவருக்கு மட்டுமே, 6 கோடியே, 45 ஆயிரத்து, 26 ஆயிரத்து, 344ரூபாய், வக்கீல் கட்டணமாக அரசு வழங்கியுள்ளது.
ஒட்டு மொத்தமாக, இவ்விரு பிரச்னைகள் தொடர் பாக, சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவதற்காக, வக்கீல் களுக்கு மட்டுமே, 39 கோடியே, 99 லட்சத்து, 37 ஆயிரத்து, 681 ரூபாயை, தமிழக அரசு செலவிட்டுள் ளது. இதுதொடர்பாக, அரசு செயலர், பிற அதிகாரி கள் சென்று வந்த
செலவுகள் தனி. இத்தனை கோடி ரூபாய் செலவிட்டும், 27 ஆண்டுகள் கடந்தும், இன்னமும்
வழக்குகள் தொடர்கின்றன.
அந்த வக்கீல்கள் யார் யார்?
காவிரி நதி நீர் பிரச்னைக்காக, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பட்டிய லில், கே.பராசரன், கே.கே.வேணு கோபால், பி.பி.ராவ், ஏ.கே.கங்குலி, சி.எஸ். வைத்திய நாதன், வி.கிருஷ்ணமூர்த்தி, வினோத் அரவிந்த் பாப்டே, ராகேஷ் திவேதி, ஆர்.முத்துக்குமார
சுவாமி, எல்.நாகேஷ்வர ராவ் என, 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் தலைமை வக்கீல்களாக, என்.ஆர்.சந்திரன், கே.சுப்ரமணியன், கே.வி. வெங்கடபதி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.நவநீத கிருஷ்ணன், ஏ.எல்.சோமயாஜி
ஆகியோரும், அரசு கூடுதல் தலைமை வக்கீல்களாக, ஆர். முத்துக்குமார சுவாமி, எஸ்.குரு கிருஷ்ண குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோரும் ஆஜராகியுள்ளனர்.
வக்கீல்களாக எம்.எஸ்.கணேஷ், ஏ.சுப்பாராவ், இ.சி.அக்ரவாலா, ஜி.உமாபதி, சி.பரமசிவம், பி.என்.ராமலிங்கம், நிக்கில் நய்யார், கே.பார்த்த சாரதி, அஜித் குமார்
சின்ஹா, எஸ்.வடிவேலு, சுப்ரீம் கோர்ட் பதிவுரு வக்கீல்களாக ரேவதி ராகவன், ஆர்.அய்யம்பெருமாள், ஆர்.நெடு மாறன், பி.பாலாஜி
ஆகியோரும் ஆஜராகி யுள்ளனர். இவர்களைத் தவிர, முல்லைப் பெரியாறு பிரச்னை சார்ந்த வழக்கில், ஆர்.மோகன் என்பவர், மூத்த வக்கீலாக
ஆஜராகியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2017