5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை
பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதார் கண்டிப்பாக வேண்டும் என்ற நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்கென்று தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பால் ஆதார் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அட்டையில் என்ன என்ன இருக்கும்?
இந்த அடையாள அட்டையில் குழந்தைகளின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்காது. குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் எண்கள் ஆகியவற்றை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன்மூலம் குழந்தைகளின் படம் எடுக்கப்பட்டு, அதில் குழந்தையின் பெயர், குழந்தையின் பிறந்த நாள், பெற்றோர்களின் பெயர் மற்றும் முகவரி சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் ஆதார் அட்டை அவர்களுக்கு வழங்கப்படும். ப்ளூ வண்ணத்தில் இந்த பால் ஆதார் அட்டை இருக்கும்.
ஐந்து வயது முடிவடைந்த பிறகு....?
குழந்தைகளுக்கு 5 வயது முடிந்த பிறகு அதனுடைய பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும். பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம். அதே சமயம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை
பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.
இந்தக் குழந்தைகள் 5 வயதை நிறைவுசெய்த பின், அவர்களின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் பதிவு செய்து பெரியவர்களுக்கு வழங்கப்படுகின்ற அட்டையைப் போல், புதிய ஆதார் அட்டை அவர்களுக்குத் தரப்படும்
பிறப்பு சான்றிதழ்களுடன் இணைப்பு
குழந்தைகளின் 5, 10 மற்றும் 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள அட்டையுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும். . தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு இ-சேவை மையங்களில் செயல்பட்டு வருகின்ற ஆதார் நிரந்தர மையங்கள் மூலமாக ஆதார் பதிவு செய்யப்படுகிறது.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018