disalbe Right click

Thursday, August 30, 2018

JEE - Joint Entrance Examination


JEE - Joint Entrance Examination - இனி வருடத்திற்கு இரு முறை
Joint Entrance Exam மெயின் தேர்வை (2019) NTA எனப்படும் National Testing Agency நடத்துகிறது. N.I.T & I.I.T உட்பட பல அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், இளநிலை இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்சர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜே..., மெயின் தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
இதற்கான விண்ணப்பப்பதிவானது வருகின்ற 01.09.2018 முதல் துவங்குகிறது. இந்த ஆண்டில் இருந்து அந்த தேர்வில் சில முக்கிய மாற்றங்களையும் தேர்வு குழு செய்துள்ளது.
முதலாவதாக இனி இந்த தேர்வு வருடங்களுக்கு இருமுறை நடைபெறும்.
ஜனவரி 6 முதல் 20ம் தேதி வரை ஜனவரி மாதத்திற்கான தேர்வும்
ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை ஏப்ரல் மாதத்திற்கான தேர்வும் நடத்தப்பட உள்ளது.
இரண்டாவதாக, இனி இது முழுக்க முழுக்க கணினி வழி தேர்வாக மட்டுமே நடத்தப்படும். மொத்தம் எட்டு அமர்வுகளாகத் தேர்வு நடைபெறும். அதில் மாணவர்கள் தங்களுக்கு பொருந்தும் அமர்வை விண்ணப்பப் பதிவின் போதே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு எழுதும் தகுதி
12வது வகுப்புத் தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் ஜே..., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.
விண்ணப்பப் பதிவை ஆன்லைன் வழியாகவே சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஜனவரி அமர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.08.2018
மாணவர்கள் ஓர் ஆண்டின் இரண்டு அமர்வுகளிலும் தேர்வினை எழுதலாம். அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு சேர்க்கையின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஜே..., மெயின் 2019ம் ஜனவரி மாதத்திற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 31 அன்று வெளியிடப்படும்
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.08.2018  

Tuesday, August 28, 2018

(FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?


(FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?
1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்தஉதவும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.08.2018