எப்.ஐ.ஆர்., பதிவு கோரிய மனுக்கள்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
பல்வேறு வழக்குகளில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, 1004 மனுக்கள் மீது, உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி, எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி, என்.சதீஷ்குமார் ஆகியோர்கள்
கொண்ட அமர்வு முன், கடந்த 19.09.2018 அன்று பட்டியலிடப்பட்டன.
நீதிபதிகள் போட்ட உத்தரவு
➽ பாதிக்கப்பட்டவர்கள்
முதலில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
அதற்கு நடவடிக்கை இல்லை எனில், காவல்துறையின் உயரதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
➽ அதற்குப்பிறகும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாவிட்டால், அந்தப் பகுதிக்குரிய கீழமை நீதிமன்றத்தை நாட வேண்டும்.
➽ பெரிய குற்றங்கள் மற்றும் துறை அதிகாரிகளின் தலையீடு உட்பட, அரிதிலும் அரிதான குற்றங்கள் தொடர்பாக மட்டுமே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிடுமாறு, உயர் நீதிமன்றத்தை நாடலாம்.
➽ காவல்நிலையம் மற்றும்
காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்யாமல், நேரடியாக உயர் நீதிமன்றத்தை
புகார்தாரர்கள் நாடக் கூடாது.
➽ காவல்நிலையத்தில் புகார் அளித்த, 15 நாட்களுக்கு பின் தான் உயர் நீதிமன்றத்தை
புகார்தாரர்கள் அணுக வேண்டும்.
➽ புகார் அளித்த, ஏழு நாட்களில், அதன் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்ட விபரத்தை அல்லது புகார் முடிக்கப்பட்ட விபரத்தை, புகார்தாரரிடம் காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும்.
புகார் முடிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, நிவாரணம் தேடி, உயர் நீதிமன்றத்தை அணுகக் கூடாது.
➽ உரிய இடத்தில்தான்
புகார்தாரர்கள் நிவாரணம் தேட வேண்டும்.
என்று அந்த உத்தரவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
நாளிதழ் – 20.09.2018
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.09.2018