இணையம் வழியாக பட்டா மாறுதல் படிவம்
சார்பதிவாளர் அலுவலகங்களில், இணையம் வழியாக பட்டா மாறுதல் செய்வதற்கு
அனுப்பப்பட்ட படிவத்திற்கு, ஒப்புகைச் சீட்டு வழங்கிடும் புதிய நடைமுறை, அமலுக்கு வருகிறது.
எஸ்.எம்.எஸ்., மூலம் ஒப்புகைச்சீட்டு
பட்டா மாறுதல் படிவத்தினை பதிவுத் துறைக்கு, அனுப்பும் வசதி தற்போது கம்ப்யூட்டர்மயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆவணத்தினை பதிவு செய்த பின்னர், பட்டா மாறுதல் படிவத்தை, இணைய வழியாக, வருவாய் துறைக்கு, உடனுக்குடன் அனுப்பி, அதன் ஒப்புகைச் சீட்டு எண்ணை, ஆவணதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு
விண்ணப்பம்
பதிவுத் துறை சார்பாக, பட்டா மாறுதல் படிவங்கள், வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டபோதும், அதற்கு அவர்கள்
நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. ஆவணதாரர், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிப்பதால், ஒரே சொத்திற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் அங்கு பெறும் நிலை உருவாகிறது.
29.10.2018 முதல் அமலுக்கு வருகிறது.
இதை தவிர்ப்பதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில், இணையம் வழியாக பட்டா மாறுதல் செய்வதற்கு
அனுப்பப்பட்ட படிவத்திற்கு, ஒப்புகைச் சீட்டு வழங்கிடும் புதிய நடைமுறை, 29.10.2018 முதல் அமலுக்கு வருகிறது.
ஒப்புகைச் சீட்டானது , அசல் ஆவணம் திரும்பப் பெறும்போழுதே, சார் - பதிவாளரால் கையொப்பமிட்டு
ஆவணதாரருக்கு வழங்கப்படும். அந்த ஒப்புகைச் சீட்டில், வருவாய் துறையினரால் அளிக்கப்பட்ட, விண்ணப்ப எண் அச்சிடப்பட்டிருக்கும்.
www.eservices.tn.gov.in என்ற, இணையதளத்திற்கு சென்று, 'Know your application
status' என்ற பாக்ஸில்,
ஆவணதாரர் தனக்கு
வழங்கப்பட்ட விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தால், மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிந்து கொள்ளலாம்.
'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் வைத்திருப்பவர்கள், 'Amma eservice of land
records' என்ற, செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, தெரிந்து கொள்ளலாம்.
இப்புதிய நடைமுறை, 29.10.2018 ம் தேதி முதல், பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 28.10.2018