disalbe Right click

Wednesday, December 26, 2018

விசாரணையில் கலந்து கொள்ள மனுதாரருக்கு ஆன போக்குவரத்துச் செலவு

விசாரணையில் கலந்து கொள்ள மனுதாரருக்கு ஆன போக்குவரத்துச் செலவு 
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)ன் கீழ் விண்ணப்பிக்கப்படுகின்ற மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.  ஆனால், இப்போதுள்ள பொதுத் தகவல் அலுவலர்கள் யாருமே வரையறுக்கப்பட்ட  30 நாட்களுக்குள் தகவல் வழங்குவதே இல்லை. அப்படியே வழங்கினாலும், அது முழுமையானதாக இருப்பதில்லை. 
வீண் அலைச்சல், மன உளைச்சல், செலவு
முதல் மேல்முறையீடு செய்து பலனில்லாமல்,  தகவல் ஆணையத்தில்  இரண்டாம் மேல்முறையீடு செய்து வருடக்கணக்கில் காத்திருந்து, தகவல் ஆணையர் அவர்களின் உத்தரவுக்குப்பிறகே தகவல்களை பெற முடிகிறது. இதனால், மனுதாரருக்கு, தேவையான நேரத்தில் தகவல்கள் கிடைப்பதில்லை. அதனால், அதிகம் மன உளைச்சலுக்கு மனுதாரர் ஆளாக்கப்படுகிறார்.  விசாரனையில் கலந்து கொள்ள சென்னை செல்ல செலவும் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு மனுதாரர் தள்ளப்படுகிறார்.  
யார் பொறுப்பு?
தேவையே இல்லாமல், மனுதாரருக்கு ஏற்படுத்தப்படுகின்ற வீண் அலைச்சல், மன உளைச்சல் மற்றும் செலவுகளுக்கு பொதுத் தகவல் அலுவலர் அவர்களே காரணம். அவர் மனுதாரர் கேட்ட தகவலை முதலிலேயே கொடுத்திருந்தால், மனுதாரர் ஏன் தகவல் ஆணையத்திற்கு செல்லப் போகிறார்?. அப்படி என்றால், அதற்கான செலவுத்தொகையை பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரருக்கு கொடுக்கவேண்டும் என்று  தகவல் ஆணையம் உத்தரவிடலாமா?
உத்தரவிடமுடியும்
உத்தரவிட முடியும். செலவுத்தொகையை மனுதாரருக்கு நஷ்ட ஈட்டுடன் மனுதாரருக்கு  கொடுக்க, பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட முடியும்.
வழக்கு
அது போன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பு நகல் பெற  இணைப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து படித்துப் பார்த்து பயனடையுங்கள்.

நன்றி : முகநூல் நண்பர்  திரு Basheer Acf அவர்கள்

Tuesday, December 18, 2018

அரசு வேலைக்கு லாயக்கற்ற 35 முதுநிலை படிப்புகள்

அரசு வேலைக்கு லாயக்கற்ற 35 முதுநிலை படிப்புகள்!
சென்னை,: அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 35 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.
ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ..சி.டி.., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.
இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி துறை தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?
பெரியார் பல்கலை:
எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.
அழகப்பா பல்கலை:
எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை
சென்னை பல்கலை
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை
பாரதியார் பல்கலை:
எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.
எம்.எஸ்சி., படிப்பில் 
பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல
பாரதிதாசன் பல்கலை:
எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை
அண்ணாமலை பல்கலை:
எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை:
எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை
அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்:
எம்.., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.
இந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டுஉள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 19.12.2018