disalbe Right click

Friday, June 21, 2019

நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு - உத்தரவுகள்

நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு
நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு, தொடர்பான சில உத்தரவுகளை பல்வேறு கால கட்டங் களில் உயர்நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன.
நம் மாநிலத்தில், அனைத்து நீர் ஆதாரங்கள் இருந்தும், முறையாக பயன்படுத்தாததால், வளமான நிலங்களை ஆக்கிரமித்தும், கழிவுகளை கொட்டியும், வீணாக்கப் பட்டுவிட்டன. கடுமையான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால்,தென் ஆப்ரிக்காவில், கேப் டவுன் நகரில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம், நமக்கும் ஏற்படும் நாள், வெகு துாரத்தில் இல்லை!
நீதிபதிகள், எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் தலைமையிலான, சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச். ஏப்., 2019 -ல் பிறப்பித்த உத்தரவு
⧭ நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்காக, தலைமை செயலர் தலைமையில், பொதுப்பணித் துறையில், சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
⧭ ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர், மாதம் ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும்.
⧭ ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு, போலீசார் ஒத்துழைக்காத பட்சத்தில், ராணுவத்தை அழைக்கலாம்.
 நீதிபதி, கிருஷ்ணகுமார், சென்னை உயர் நீதிமன்றம். ஏப்., 2019-ல் பிறப்பித்த உத்தரவு
⧭ கடலில் வீணாக கலக்கும் மழைநீரை, குளம், குட்டை களுக்கு திருப்பி விட, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
⧭ இதற்கு, ஆலோசனை தெரிவிக்க, தமிழக அரசு, சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
நீதிபதிகள், மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச், சென்னை உயர் நீதிமன்றம். 18 ஜூன், 2019ல் பிறப்பித்த உத்தரவு
⧭ மாநிலம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உள்ளது. இந்த சூழ்நிலை கருதி, எத்தனை நீர்த்தேக்கங்கள் துார் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, பணிகளின் நிலை என்ன... சாகப் போகும்போது என்னவோ சொல்வரே, அதுபோல் கடைசி நேரத்தில், தண்ணீர் சேமிப்பு குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்வதால் என்ன பயன்?
⧭ நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகள், ஆக்கிர மிப்புகளால் சுருங்கிவிட்டதாக, கவனத்திற்கு வந்து உள்ளது
⧭ ஏரிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளும், தண்ணீர் தேக்கம் குறைவுக்கு முக்கிய காரணம். ஆக்கிரமிப்புகள் குறித்தும், பொதுப்பணித்துறை செயலர், அறிக்கை அளிக்க வேண்டும்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்தும், கூடுதலாக நிலையம் அமைக்க, ஆய்வு ⧭ மேற்கொள்ளப் பட்டதா எனவும், அறிக்கை அளிக்க வேண்டும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 19.06.2019

Friday, June 14, 2019

பென்சன் தொகை பெற யாருக்கு உரிமை உள்ளது?

பென்சன் தொகை பெற யாருக்கு உரிமை உள்ளது?
திருமணமான ஒரு அரசு அதிகாரி இறந்துவிட்டார். அவரது பென்ஷன் தொகையை பெற, அவரது மனைவி அரசி்டம் விண்ணப்பித்தார். அரசாங்கமும் அவரது விண்ணப்பத்தை பரிசீலணை செய்து ஒப்புதல் அளித்தது.
எனக்கும் பங்கு வேண்டும்!
இந்நிலையில் இறந்த அரசு அதிகாரியின் தாய் தனக்கும் அந்த பென்ஷன் தொகையில் பங்கு வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.
ஆளுக்குப் பாதியாக வச்சிக்கோங்க!
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 50% பென்ஷன் தொகையை தாயாருக்கும், 50% பென்ஷன் தொகையை மனைவிக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாமல் இறந்த அரசு அதிகாரியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கினை நீதியரசர்கள் A.R.Daue மற்றும் L.Nageswara Rao ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குடும்ப பென்ஷன் சட்டப் பிரிவின் (Family Pension Scheme 1964 and Subclause - f)-ன் கீழ் திருமணமாகாத ஒருவர் இறந்துவிட்டால், அவரது பென்ஷன் தொகை அவரது தாயாருக்கு வழங்கப்படும். அவருக்கு திருமணம் ஆகிவிட்டால், அவரது மனைவிக்கு மட்டுமே பென்ஷன் தொகை வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தது.
Supreme Court, Nitu Vs Sheela Rani 2016,
Decided on 28.09.2016
Thanks to Lawyers Line - December 2016

Image may contain: 1 person, text

சட்டம் சார்ந்த அருமையான பதிவுகள், தீர்ப்புகள் என்று சிறப்பான சேவையை பொதுமக்களுக்கு தந்து கொண்டிருக்கும் லாயர்ஸ் லைன் பத்திரிக்கை நிர்வாகத்திற்கு நன்றி.
பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அருமையான இந்த புத்தகமானது மாதாமாதம் வெளிவருகிறது. சட்டம் குறித்த சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார் இதன் ஆசிரியர் திரு வெ.குணசேகரன் அவர்கள். உங்களது சட்ட அறிவை வளர்த்துக் கொள்ள நீங்களும் இந்த புத்தகத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்.

By Credit / Debit CardYou can Pay by Credit / Debit Card Online
Payment Gateway

For RENEWAL SUBSCRIPTION
Payment Gateway
By Cheque / DDCheque/D.D/M.O in favour of : LAWYERS LINE
Send your Cheque / Demand Draft / Money Order to the following address 
72/3, Anand Apartments
100 Ft. Road, Vadapalani
Near Vadapalani Signal
Chennai - 600 026,
Tamil Nadu,India.
Phone No : 044 - 23 65 00 44
Mobile No : 098416 07006
E - mail :: subscription@lawyersline.net
By Bank DepositYou can deposit amount directly to the following Bank Account
Account Name : LAWYERS LINE
Account No. : 149202000000797
Bank Name : Indian Overseas Bank,
Branch : K.K. Nagar, Chennai, India.
Doorstop ServiceDoorstep service available in chennai city only
Do call our office at 044-23650044 or 9841607006, our executive
will come and collect in your doorstep by fixing an appointment with you.
And this service available only in chennai city.


 ***************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி , 15.06.2019 

Tuesday, June 11, 2019

காவல்நிலையத்தில் மனு ஏற்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியம்


காவல்நிலையத்தில் மனு ஏற்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியம் என்ன?
காவல்நிலையத்தில் நேரடியாக புகார் அளிப்பவர்கள் தங்களால் அளிக்கப்படுகின்ற புகார் சம்பந்தமான, மனு ஏற்புச் சான்றிதழ் எனப்படுகின்ற CSR ரசீதை  கண்டிப்பாக அவர்களிடமிருந்து கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், முதலில் புகார் அளித்த வாதி மீது, பிரதிவாதி புகார் அளித்து தப்பித்துக் கொள்ள  வாய்ப்புள்ளது. இன்றைய காவல்நிலையங்கள் அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும், அடிபணிந்து நடப்பதை பல செய்திகளில் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு : 1
உதாரணமாக உங்களை ஒருவர் தாக்கியவுடன் காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று எழுத்து மூலமாக புகார் அளிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புகாருக்கு மனு ஏற்பு ரசீது வாங்கிவிட்டால் நல்லது. நீங்கள் முதலில் புகார் அளித்ததை மாற்ற முடியாது.  இல்லையென்றால், அந்த காவல் நிலையத்தில் உள்ள அலுவலர்கள் உங்களை தாக்கியவருக்கு வேண்டியவர்கள் என்றால், அவரிடமிருந்து ஒரு புகாரை எழுதி வாங்கி பதிவு செய்து கொண்டு, (நீங்கள்தான் அவரை முதலில் அடித்ததாகவும்,  அவர் உங்கள் மீது ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் கூறி) வழக்கை திசை திருப்பி உங்களை மிரட்டி பணிய வைக்க முடியும்.
எடுத்துக்காட்டு ;2
நீங்கள் உங்கள் நண்பருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு கார் வேகமாக வந்து உங்கள் நண்பர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விடுகிறது. காரின் நம்பரை குறித்து வைத்துக் கொள்கிறீர்கள். நண்பருக்கு விபத்தினால் பலத்த காயம் ஏற்பட்டு. உயிருக்கே ஆபத்து. உண்டாகிறது. நண்பர் சுயநினைவை இழக்கிறார். அருகில் உள்ளவர்கள் மூலம் நண்பரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு , புகார் அளிக்க காவல் நிலையம் செல்கிறீர்கள். புகாரை பெற்றுக் கொண்டு ரசீது தரவில்லை என்றால், ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று அர்த்தம். காவல் துறையினர் அந்த கார் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு அவரது காரை ஒரு மணி நேரமாக காணவில்லை என்று புகார் எழுதி வாங்கிக் கொண்டு, அதனை முதலில் பதிவு செய்து, காரை திருடியவர்தான் விபத்தை உண்டாக்கிவிட்டார் என்று அந்த புகாரை முடித்து வைக்க முடியும். அந்த கார் உரிமையாளரை அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முடியும். 
எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்
ஆகையினால், காவல்நிலையத்தில் எந்தப் புகாரையும் நேரடியாக அளித்தால் மனு ஏற்பு சான்றிதழ் பெற தவறாதீர்கள். எல்லாக் காவல் நிலையங்களிலும் இது போல் நடப்பதில்லை என்றாலும், தயவு செய்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
அவர்கள் தர மறுக்கும்போது மனுதாரர் என்ன செய்ய வேண்டும்?
அவர்கள் புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தர மறுத்தாலோ, தட்டிக் கழித்தாலோ உடனடியாக அந்த மனுவின் ஒரிஜினல் காப்பி ஒன்றை பதிவுத்தபால் மூலமாக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்திற்கும், அந்த காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்து விடுங்கள். இதை செய்வதன் மூலம் ஒரு நல்ல ஆதாரத்தை மற்றும் பாதுகாப்பை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
காவல்துறை இயக்குநர் அவர்களின் ஆணை
காவல்நிலையங்களில் எந்தப்புகார் அளித்தாலும், அதற்கு தாமதமில்லாமல் உடனடியாக மனு ஏற்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட ஆணை நகல்,  காவல்துறை இயக்குநர் அவர்கள் வெளியிட்ட ஆணை நகல், மனு ஏற்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற  முகநூல் நண்பர் திரு Saravanan Palanisamy  அவர்கள் முகநூல் நண்பர் திரு  A.Govindaraj Tirupur அவர்கள் மூலமாக நமக்கு வழங்கி உதவியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் நன்றி. அதன் இணைப்பு கீழே உள்ளது.
https://drive.google.com/file/d/1-Lm3tVu8dHVE9eYQjwUtMEfvEpXht0Ky/view?fbclid=IwAR3xMs9rfQuFR04INEtS8uMmMOUwJiMNGcyPPsNuo7eEZaOgbfxYvoqWWto

******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.06.2019

Saturday, June 8, 2019

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

பிரதமரின் நேரடி பணியாளர்களையும், பிரதமருக்கு பல்வேறு நிலைகளில் உதவிபுரியும் பணியாளர்களையும் உள்ளடக்கியது பிரதமர் அலுவலகம். இதன் நிர்வாக தலைவராக பிரதமரின் முதன்மை செயலர் இருப்பார். தற்போது இந்த பதவியில் நிரிபேந்திர மிஸ்ரா உள்ளார்.

இந்நிலையில், அவசர காலங்களில் உதவிக்கு பிரதமர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான முகவரிகள், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் அலுவலக முகவரி:

152, தெற்கு பிளாக்,

ரைசினா ஹில்,

புதுடில்லி - 110011.

போன்:+91-11-23012312, 23018939

பேக்ஸ்: +91-11-23016857

பிரதமரின் வீட்டு முகவரி:

7, ரேஸ்கோர்ஸ்ரோடு,

புதுடில்லி-110001

போன்:+91-11-23911156,23016060

பேக்ஸ்: + 91-11-23018939

பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள முகவரி

அறை எண்- 10,

பார்லிமென்ட் வளாகம்,

புதுடில்லி-110001

போன்:+91-11-23017660

பேக்ஸ்: +91-11-23017449

பிரதமர் அலுவலக இணை அமைச்சர்:

ஜிதேந்திரா சிங்

மொபைல்: +91 - 11-23010191, +91-11-23013719

பேக்ஸ்: +91-11-23017931

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: 
திரு அஜித் தோவல்

போன்:+91-11-23019227

பிரதமரின் முதன்மை செயலர் : 
திரு நிரிபேந்திர மிஸ்ரா

போன்:+ 91-11-23013040

பிரதமரின் செயலர்,  
திரு பாஸ்கர் குல்பே

போன்: +91-11-23010838

பிரதமரின் தனிச்செயலர்

திரு சஞ்சீவ் குமார் சிங்லா

போன்:+91-11-23012312

பிரதமரின் தனிச்செயலர்

திரு ராஜீவ் தொப்னோ

போன்:+91-11-23012312

பிரதமர் அலுவலகத்தின் தகவல் மற்றும் 
 தொலைநுட்பத்திற்கான சிறப்பு பணியில் உள்ள அதிகாரி

திரு ஹிரேன் ஜோஷி . போன்:+91-11-23014208



நன்றி : தினமலர் நாளிதழ் – 08.06.2019