disalbe Right click

Saturday, February 22, 2020

பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை சமர்ப்பிக்க

பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை சமர்ப்பிக்க......
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பகத்தின் (EPFO - Employees' Provident Fund Organisation)  கீழ் பென்சன் பெறுகின்ற ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பென்சன் தொடர்ந்து வழங்கப்படும்.
இதற்கு முன் இருந்த நடைமுறை என்ன?
இதற்கு முன்பு பென்சன்தாரர்கள் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் லைப் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்ஒருவேளை லைப் சான்றிதழ் அவ்வாறு சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதிய தொகை நிறுத்தப்பட்டுவிடும்
பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பகத்தின் கீழ் பென்சன்தாரர்கள், ஆன்லைன் மூலமாக லைப் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவர்கள் அந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த ஓராண்டு வரை இந்த சான்றிதழ், செல்லும்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையால் பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க நவம்பர் மாதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. தங்களுக்கு வசதியான மாதத்தில் அல்லது நாளில் சான்றிதழை சமர்பிக்கலாம். ஒருமுறை சமர்ப்பிக்கும் சான்றிதழானது அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
டிஜிட்டல் சான்றிதழ் முறை, கடந்த 2015-16 ம் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் பென்சன்தாரர்கள் பயோமெட்ரிக் முறையில், அவர்களின் ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட பிறகு, அதனை பயன்படுத்தி சான்றிதழை சமர்பிக்கலாம் என்ற வசதி ஏற்பட்டது.
ஆன்லைனில் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
பென்சன்தாரர்கள் தங்களது லைப் சான்றிதழை வங்கி மேனேஜரின் கையொப்பம் அல்லது கெஜட்டட் அதிகாரியின் கையொப்பம் அடங்கிய சான்றிதழை நேரடியாக சென்று அளிப்பதற்கு பதிலாக, எந்த ஒரு இபிஎப்ஓ எலுவலகத்திலும் அல்லது பென்சன் வழங்கப்படும் வங்கியிலும், UMANG ஆப் மூலமாக இதனை சமர்பிக்கலாம். .மேலும், பொது சேவை மையங்களிலும் இதனை சமர்பிக்கலாம்.
வேறு ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டுமா?
லைப் சான்றிதழை சமர்பிப்பதற்கு இபிஎப்ஓ அலுவலகத்திற்கு எந்த ஒரு ஆவணத்தையும் பென்சன்தாரர்கள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவர்களது ஆதார் எண், பென்சன் பேமன்ட் ஆர்டர் எண், வங்கி விபரம், மொபைல் எண் இருந்தாலே போதும். அவர்களது விபரங்கள் பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கப்படும். அதன் மூலம் டிஜிட்டல் லைப் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.


Wednesday, February 19, 2020

பொது தகவல் அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை!

பொது தகவல் அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை!
தகவல் அறியும் உரிமை சட்டம் - பொது தகவல் அலுவலரின் கவனத்திற்கு....ஒரு பொது தகவல் அலுவலரின் ஆதங்கம் 
  • இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த பிறகு ஏராளமான மனுக்கள் வருகின்றது
  • அந்த மனுக்களை எனக்கு கீழே பணிபுரிபவர்களிடம் கொடுத்து அதற்கான தகவலை வழங்க கோருகின்றேன்
  • அவர்கள் பல நேரங்களில் தாமதமாக எனக்கு தகவலை வழங்குவதால், அதன் அடிப்படையில் மனுதாரருக்கு பதில் எழுத கால தாமதம் ஆகிவிடுகின்றது
  • அதற்குள் மனுதாரர் மேல் முறையீடு செய்துவிடுகின்றார். சில நேரங்களில் சரியான தகவல்களை எனக்கு கீழே பணிபுரிபவர்கள் வழங்காததால், தகவல் ஆணைய விசராணைக்கு நான்தான் செல்ல வேண்டியதுள்ளது.
  • விசாரணையின்போது, அந்த தகவல் சார்ந்த அனைத்து விஷயங்களும் முழுமையாக தெரியாததால் பல நேரங்களில் மனுதாரர் வைக்கும் வாதங்களுக்கு என்னால் ஆணையர் முன்பு முறையான எதிர் வாதங்களை வைக்கமுடிவதில்லை
  • இதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை?
இவரின் ஆதங்கத்திற்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் எந்த வகையில் அவருக்கு உதவுகின்றது என்று பார்ப்போம்
  • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 5(1) கீழ்கண்டவாறு கூறுகின்றது 
  • பொது அதிகார அமைப்பு ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின்படி தகவலினைக் கோருகிறவர்களுக்குத் தகவலினை அளிக்க, அனைத்து நிர்வாகப்பிரிவுகளிலும் அல்லது அதன் கீழுள்ள அலுவலகங்களிலும் தேவைப்படுகின்ற எண்ணிக்கையிலான அலுவலர்களை இந்த சட்டத்தின்படி பதவியமர்த்த வேண்டும. (ஆங்கிலத்தில்.... designate as many officers’ ன்று குறிப்பிடப்பட்டுள்ளது)
  • ஒரு அலுவலகத்தில் ஒரு பொது தகவல் அலுவலர்தான் இருக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை
  • ஆகவே, பெரிய அலுவலகங்களில் பொது தகவல் அலுவலரின் பணிச்சுமையை குறைக்க, அந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் அல்லது பிரிவிற்கும் ஒரு பொது தகவல் அலுவலரை நியமிக்கலாம்
  • உதாரணமாக ஒரு பிரிவிற்கான கண்காணிப்பாளரை, அல்லது நிர்வாக அதிகாரியை அந்த பிரிவு சார்ந்த தகவல்களை வழங்க பொது தகவல் அலுவலராக நியமித்து விடலாம்
  • இந்த வகையில் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களை அந்த அலுவலகத்தில் இலகுவாக கையாளலாம்
  • அந்த பிரிவை சார்ந்த கண்காணிப்பாளரானவர் பொது தகவல் அலுவலராக நியமிக்கப்படும்போது, அந்த மனுக்களை பைசல் செய்ய அவருக்கு தனிப்பொறுப்பு வந்துவிடும்
  • இதனால் மனுக்களுக்கு விரைவாக பதில் அளிக்கபட வாய்ப்புண்டு
  • மேலும் தகவல் ஆணைய விசாரணையில் அவருக்கு அவரது பிரிவை சார்ந்த புரிதல் இருப்பதால், ஆணைய விசாரணையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்
  • இந்த முறையில்தான் தமிழக அரசின் செயலகத்தில் உள்ள பல துறைகளானது, அவர்கள் துறையிலேயே பல பொது தகவல் அலுவலர்களை கொண்டுள்ளது
  • ஒரே அலுவலகத்ததில் பல பொது தகவல் அலுவலர்களை நியமிக்க சட்டத்தில் இடம் இருக்கும்போது, அவ்வாறு நியமித்தால் மட்டுமே, பொது தகவல் அலுவலர்களின் வேலைப்பழுவை குறைக்கலாம்.

நன்றி : எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு Leenus Leo Edwards